கண் திருஷ்டி விலக வெள்ளிக்கிழமை பரிகாரம்
கண் திருஷ்டி தீர வேண்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை தினங்களில் தான் பெரும்பாலும் பரிகாரங்கள் செய்வார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தாலும், உங்களுடைய வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியானது விரட்டி அடிக்கப்படும் என்பது நம்பிக்கை. சில பேருக்கு ஒரு சில காலகட்டத்தில் கண் திருஷ்டியால் அதிக பாதிப்பு வரும்.
ஜாதகத்தில் நம்முடைய கிரகங்களின் சூழ்நிலை மாறும் போது கண் திருஷ்டியால் நாம் எளிதில் பாதிக்கப்படுவோம். சில சமயங்களில் நம் மீது எவ்வளவுதான் கண் திருஷ்டி விழுந்தாலும், நமக்கு பிரச்சனைகள் வராது. சில சமயம் யாராவது ஒருவர் நம்மை போன போக்கில் பார்த்துவிட்டு சென்றாலும் அதன் மூலம் நமக்கு உடல் உபாதைகள் வந்துவிடும்.
வீட்டில் சண்டை சச்சரவும் வந்துவிடும். ஆக கண் திருஷ்டியால் நீங்கள் எப்போதுமே பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், மாதம் தோறும் ஒரு முறை வெள்ளிக் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு.
மாலை 6 மணிக்கு பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை செய்யப்படும். அந்த சமயத்தில் பூஜை அறையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ‘எங்களுடைய வீட்டிற்கு கண் திருஷ்டியின் மூலம் எந்த பாதிப்பும் வரக்கூடாது. கண் திருஷ்டியால் பணகஷ்டம் வந்து விடக்கூடாது. வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளும் வந்து விடக்கூடாது.
கண் திருஷ்டியால் முக்கியமாக சண்டை சச்சரவுகள் வீட்டில் இருக்கக் கூடாது’ என்று பிரார்த்தனை செய்து அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக அறுத்து குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைத்து விட வேண்டும். இது முதல் பரிகாரம்.
அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேலாக ஒரு முழு பூசணிக்காயை எடுத்து அதன் மேலே கற்பூரம் வைத்து, உங்கள் வீட்டையும், உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களையும் சுற்றி வீதியில் உடைத்தால், கண் திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. உடைத்த பூசணிக்காயை நடுரோட்டிலேயே விட்டுவிடக்கூடாது. ஓரமாக எடுத்து போட்டு விட வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் பூசணிக்காய் சுற்றி உடைத்தாலும் தவறு கிடையாது.
பூசணிக்காயை உடைப்பதற்கு முன்பு அதில் ஓட்டை போட்டு, உள்ளே குங்குமம் போடுவது போன்ற விஷயங்களை செய்யாதீங்க. பூசணிக்காய் மேல் கற்பூரம் வைத்து முழுசாக சுற்றி, அதன் பிறகு உடைத்து அதற்குப் பிறகு உள்ளே குங்குமம் கொட்டலாமே தவிர, முழு பூசணிக்காவில் ஓட்டை போடும்போது அதை முதலிலேயே நாம் பலி கொடுத்து விடுகின்றோம்.
இதையும் படிக்கலாமே: அமாவாசையில் பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்
பிறகு அந்த பூசணிக்காயை சுற்றுவதன் மூலம் நமக்கு முழுமையான பலன் கிடைக்காது. ஆக முழு பூசணிக்காயை சுற்றி உடைக்கும் போது தான் நம்முடைய கண் திருஷ்டியானது முழுமையாக கழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.
The post கண் திருஷ்டி விலக வெள்ளிக்கிழமை பரிகாரம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.