மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
மதுபானம் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு மறதி பிரச்சனை ஏற்படும் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் மதுபானம் அருந்துவது காரணமாக உயிரிழந்து வருவதாகவும், அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 88 ஆயிரம் பேர் மதுபானம் பழக்கத்தால் உயிரிழந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகளவில் ஆல்கஹால் பாதிப்புகளால் ஏற்படும் நோய்கள் அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் மது பழக்கம் பொருளாதார நிலையை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வதோடு, தொடர்ச்சியாக மது அருந்துபவர்களுக்கு மனக்குழப்பம், சோர்வு, எதிலும் நாட்டம் இல்லாமல் மன அழுத்தம் போன்ற நோய்கள் உருவாக வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுபானம் அடிக்கடி எடுத்து கொண்டால் மூளையின் ஆற்றல் சிதைந்து, மறதி திறன் ஏற்படுவதாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மதுபானம் அருந்துவதால், மூளை பலவீனமாகி மனதில் மந்தமான தன்மையை உருவாக்கும் என்றும், இதனால் மூளை செல்களை புதிதாக உருவாவதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து ஒருவர் மதுபானம் அருந்தினால் மறதி நோய் ஏற்படும் என்றும், சமீபத்தில் நடந்த சம்பவங்களை கூட அவர்களால் நினைவுக்கு கொண்டு வர முடியாது என்றும் கூறப்படுகிறது. சில நேரங்களில், நன்கு தெரிந்தவர்கள் பெயர் கூட மறந்து போகும் அளவுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மதுபானத்தால் மற்ற உறுப்புகளை விட, மூளை தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், மதுபானம் அருந்துபவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Mahendran,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.