Madhavan: மாதவனின் 28 ஆண்டுகளுக்கு முந்தைய லட்சியம்; வைரலாகும் இன்ஸ்டா பதிவு
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் மாதவன்.
தமிழில் அலைபாயுதே, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், யாவரும் நலம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் மாதவன், இந்தியில் ராஜ்குமார் ஹிரானியின் `3 இடியட்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும், மாதவன் நடிகர் என்பதைத் தாண்டி 2022-ல் `ராக்கெட்ரி: நம்பி விளைவு என்ற படம் மூலம் இயக்குநராகவும் உருவெடுத்தார். மாதவன் நடிப்பில் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் வாங்கியது.
இது தவிர திரைப்படத் தயாரிப்பாளராகவும் மாதவன் விளங்குகிறார். இந்த நிலையில், 28 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பட்டப்படிப்பு சமயத்தில் தனது லட்சியம் குறித்து ஆண்டுப் புத்தகத்தில் தான் குறிப்பிட்டிருப்பது பற்றிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மாதவன் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தில், மாதவனின் படத்துக்கு அருகில் லட்சியம் என்று குறிப்பிட்டு, `பணக்காரராகவும், பிரபல நடிகராகவும் ஆக வேண்டும். அனைத்துத் துறையிலும் குறிப்பிடத்தக்கவனாக விளங்க வேண்டும். சிலவற்றில் மாஸ்டராக இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் மாதவன், ``28 வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய லட்சியத்தில் கொஞ்சம் சாத்தியமாகியிருக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்.
Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.