Hande Hospital: மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழா
நவம்பர் 28, 2024-ல் மருத்துவம் மற்றும் பொது சேவையில் முன்னோடியான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களின் 98வது பிறந்த நாள், ஹண்டே மருத்துவமனை ஷெனாய் நகர், 44, லட்சுமி டாக்கீஸ் ரோடு, சென்னை – 600030-ல் கொண்டாடப்படுகிற இந்த நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மையம் டாக்டர் கிருஷ்ணா ஹண்டே, எம்.எஸ்., எப்.ஆர்.சி.எஸ்., எம்.சி.ஹெச் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த மையத்தை முக்கிய பிரமுகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் பிரபல பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக நிறுவப்பட்ட இந்த மையம் மருத்துவ சிகிச்சையில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். சமீபத்தில் தொழில்நுட்பத்துடன் தைராய்டு, கல்லீரல் புற்று நோய், ஃபைப்ராய்டு கருப்பை மற்றும் மார்பகத்தின் ஃபைப்ரோடெனோமா ஆகியவற்றின் கட்டிகளை குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய உறுப்புகளை பாதுகாத்து மற்றும் துல்லியமாக அகற்ற முடியும். சுருள் நாளங்கள், பைல்ஸ், ஃபிஷர், ஃபிஸ்துலா, லைபோசஷன், மார்பக குறைப்பு, முடிமாற்று அறுவை சிகிச்சை (FUE) சிறுநீரகக் கல் அகற்றுதல் போன்ற சிகிச்சைகள் ஹண்டே மருத்துவமனையில் உள்ள லேசர் மற்றும் லேப்ராஸ்கோபிக் மையத்திற்கு இது ஒரு முக்கிய பங்கு ஆகும். இந்த நடைமுறைகள் நோயாளியின் அசௌகரியத்தைக் குறைப்பது, மருத்துவமனையில் தங்குவதை குறைக்கும்.
முக்கிய விருந்தினரான திரு. நல்லி குப்புசாமி செட்டி எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் டாக்டர் ஹண்டேவின் அயராத அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என இந்த மையத்துடன் மருத்துவமனையின் புதுமையான அணுகுமுறையை பாராட்டினார்.
டாக்டர் கிருஷ்ணா ஹண்டே தனது கருத்துக்களில் மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் இலக்கு திசுக்களை மட்டும் அழிக்கிறது. இத்தகைய நடைமுறைகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும். மேலும் நோயாளிகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கிறது.
செயல்முறைக்குப் பிறகு மிகக் குறைந்த நேரத்துடன் மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் சிகிச்சை ஹண்டே மருத்துவமனைக்கு ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. மருத்துவத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை ஒன்றிணைப்பதின் மூலம் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரத்திற்கான உறுதிப்பாட்டை ஹண்டே மருத்துவமனை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு நோயாளியின் பராமரிப்பும் முடிந்தவரை பயனுள்ளதாகவும் திறமையாகவும் இருப்பதை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று டாக்டர் கிருஷ்ணா ஹண்டே விளக்கினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.