கண் திருஷ்டி விலக குளிக்கும் முறை

ஒருவருடைய முன்னேற்றம் தடைபடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதல் காரணமாக சொல்லப்படுவது கண் திருஷ்டி தான். இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றமா, இந்த அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கவில்லையே, இவன் ஒரு பெரிய அதிர்ஷ்டக்காரன் தான், என்று ஒருவன் மற்றொருவனை பார்த்து பெருமூச்சு விட்டாள் போதும். அந்த வெற்றியை உடனடியாக தோல்வியாக மாறும். அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம்.

கத்தியை விட மிக மிக கூர்மையான ஆயுதம் ஒருவருடைய கொடுமையான கண்பார்வையும் கண் திருஷ்டியும். ஆகவே உங்கள் உடம்பை அடுத்தவர்கள் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்க, செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வியாபாரமும் படுத்து விட்டது, உங்களால் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை , வியாபாரம் செய்யும் இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க முடியவில்லை, அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்தால் தலைவலி வருகிறது, இடுப்பு நிற்கவில்லை உடல் சோர்வு அதிகமாக இருக்கிறது வேலையில் ஆர்வம் இல்லை என்று, இப்படி பலதரப்பட்ட எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

கண் திருஷ்டியை நீக்கும் குளியல் முறை

ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், பிரியாணி இலை, மஞ்சள் கிழங்கு, மிளகு, இந்த 6 பொருட்களை எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த பொடி தயார் செய்ய நாம் பயன்படுத்தி இருக்கும் ஆறு பொருட்களுமே இறை சக்தி வாய்ந்தது. எதிர்மறை ஆற்றலை எதிர்க்கக்கூடிய தன்மை கொண்டது.

தினமும் குளிக்க செல்வதற்கு முன்பு குளிக்கின்ற தண்ணீரில் 1 ஸ்பூன் இந்த பொடியை போட்டுக்கொள்ள வேண்டும், அந்த தண்ணீரில் ஓம் என்ற வார்த்தையை உங்கள் வலது கையால் எழுதி விடுங்கள். அந்த தண்ணீர் கங்கை தீர்த்தது போல புனிதமான நீராக மாறிவிடும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தாலும் தவறு கிடையாது.

பிறகு கிழக்கு நோக்கி நின்றவாறு இந்த தண்ணீரில் குளித்தால் உங்கள் உடம்பை பிடித்த கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் எல்லாம் தினம் தினம் உங்கள் உடம்பை விட்டு வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வெறும் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் என்று அவ்வளவு எளிமையான வார்த்தையில் சொல்லிவிட முடியாது. சிலபேர் உடம்பில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தி தங்கி இருக்கும்.

நேரம் காலமில்லாமல் வெளியிடங்களுக்கு செல்கின்றோம், அடுத்தவர் திருஷ்டி சுற்றி போட்ட கழிவுகளை மிதிக்கின்றோம், தாண்டுகின்றோம். அதன் மூலம் நம்மை தாக்கும் கெட்ட சக்தி கூட நம்முடைய உடம்பில் பிரச்சனையை கொடுக்கும். நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனையை கொடுக்கும். அதையெல்லாம் கூட உங்கள் உடம்பில் இருந்து விளக்கக்கூடிய ஆற்றல் இந்த பொடிக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே: சிதம்பர சக்கரம் வழிபாடு

எளிமையான இந்த பரிகாரத்தை யார் வேண்டுமென்றாலும் பின்பற்றலாம் வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு கூட இந்த பொடியை போட்டு உடம்புக்கு குளிப்பாட்டி விடுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. இந்த தண்ணீரில் தலைக்கு மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் உடம்புக்கு குளிக்கும் தண்ணீரிலும் இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். நெகட்டிவ் எனர்ஜியை விரட்டியடிக்கும் சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

The post கண் திருஷ்டி விலக குளிக்கும் முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.