வங்கி கணக்கில் பணம் சேர சுவிட்ச் வேர்ட்

உங்களுடைய வங்கிக் கணக்கில் நிறைய பணம் சேர்வதற்கு உண்டான ஒரு மந்திர வார்த்தையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆங்கிலத்தில் இதை switch word என்று சொல்லுவார்கள். ஒருவருடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால், அந்த நபருடைய வாழ்க்கையில் பைத்தியமே பிடித்து விடும். செலவுக்கு கையில் பணம் இருந்தால் தான் மனதில் ஒரு நிம்மதி. இப்போது கையில் பணம் தேவையில்லை. அக்கவுண்டில் பணம் வைத்திருந்தால் போதும்.

உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எப்போதுமே 0 வில் இருக்குமா. சில பேருக்கு பேக் அக்கவுண்ட் மைனஸில் கூட போகும் அவர்கள் ஒரு ரகம். உங்களுடைய அக்கவுண்ட் பேலன்ஸை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவோமா. அதற்கு முதலில் என்ன செய்யணும். நல்ல வேலை செய்யணும். நல்ல தொழில் செய்யணும். விடா முயற்சி எடுக்கணும். கஷ்டப்பட்டு எப்படியாவது நம்முடைய வங்கிக் கணக்கில் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வரவேண்டும்.

இந்த எண்ணம் எல்லாம் என்னிடம் இருக்கிறது. கடின உழைப்பும் என்னிடம் இருக்கிறது. ஆனால் இந்த வங்கிக் கணக்கில் போட்ட பணம் மட்டும் சேமிப்பில் தங்கவில்லை, ஏதாவது ஒரு செலவுக்கு அக்கவுண்டில் இருக்கும் பணம் செலவாகுது அல்லது வங்கி கணக்கில் பணம் வரவே இல்லை என்பவர்கள் என்ன செய்யலாம். இந்த பிரச்சனைகளை எல்லாம் கடப்பதற்கு உண்டான ஒரு சுவிட்ச் வோர்ட். இது கதை அல்ல நிஜம். நிச்சயம் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் இந்த வார்த்தையை உச்சரித்து பாருங்கள்.

இந்த வார்த்தையை சொன்ன ஒரு சில மணி நேரங்களில் உங்களுடைய அக்கவுண்டில் நிச்சயம் ஒரு தொகை வந்து சேரும். சில பேர் அடுத்தவர்களுக்கு கடனை கொடுத்துவிட்டு அதை வசூல் செய்ய முடியாமல் இருப்பார்கள். சிலரிடம் போய் நம்முடைய பணம் சிக்கி இருக்கும். அது நம்முடைய வங்கி கணக்கு திரும்பவும் வராமல் இருக்கும், ஏதாவது லீகலான பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த வார்த்தை உங்களுக்கு பயன்படும். சரி, அந்த மந்திர வார்த்தை என்ன.

‘ADD COUNT PLETHORA (bank) 319618719814’ இதுதாங்க அந்த மந்திர வார்த்தை. இதை தான் நீங்கள் சொல்ல வேண்டும். பிராக்கெட்டில் bank என்று கொடுக்கப்பட்டுள்ளது அல்லவா. அந்த இடத்தில் நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ, அந்த வங்கியின் பெயரை சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு, Indian Bank, ICICI Bank, HDFC Bank இப்படி எந்த வங்கியில் உங்களுடைய கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் பெயரை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் பேங்க் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு உங்களுடைய வங்கியின் பெயர் வர வேண்டும். அந்த வார்த்தையோடு எண்களையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும். இந்த வார்த்தையையும் வங்கி பெயரையும் நம்பரையும் நம்பிக்கையோடு உச்சரிக்க, பணம் பேங்க் அக்கவுண்டில் வந்த வண்ணம் இருக்கும். எப்போதெல்லாம் உச்சரிக்க வேண்டும். காலையில் எழுந்து மனதை ஒருநிலைப்படுத்தி இந்த வார்த்தைகளை சொல்லலாம்.

அல்லது மதிய நேரத்தில் செல்லலாம், அல்லது இரவு தூங்கும் போது சொல்லலாம். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த வார்த்தையை சொன்னால் போதும் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இந்த பணம் என்னுடைய வங்கி கணக்கு வரவேண்டும் என்று.

இதையும் படிக்கலாமே: வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்க

ஆனால் அந்த பணம் என்னுடைய வங்கி கணக்குக்கு வந்து சேரவில்லை என்று நீங்கள் நினைத்தால், அந்த வங்கி பணத்தை உங்கள் அக்கவுண்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலையை இந்த வார்த்தைகள் நிச்சயம் செய்யும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post வங்கி கணக்கில் பணம் சேர சுவிட்ச் வேர்ட் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.