9-9-2024 அன்று செய்ய வேண்டிய பண வசிய பரிகாரம்
இந்த பிரபஞ்சம் நாளுக்கு நாள் நமக்கு எதிர்பாராத நல்ல விஷயங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நாளை 999 என்ற நம்பரை கொண்டு வந்திருக்கக்கூடிய சக்தி வாய்ந்த நாள். 9.9.2024, வருடத்தின் கூட்டுத் தொகையும் 9. இந்த சக்தி வாய்ந்த நாளில் பணத்தை வசியம் செய்ய நாம் சொல்ல வேண்டிய ஒரு (சுவிட்ச் வோர்டு) மந்திர வார்த்தையை பற்றி தான் இன்று தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த மந்திர வார்த்தை நிச்சயம் உங்கள் பணக்கஷ்டத்தை ஏதாவது ஒரு வகையில் போக்கும். ஏதாவது ஒரு வகையில் பண வரவை உங்களுக்கு கொடுக்கும். அந்த மந்திர வார்த்தை என்ன. அதை எப்படி சொல்லுவது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பணவசிய பரிகாரம்
இந்த மேஜிக் நாளோடு சேர்ந்து நமக்கு சஷ்டி திதியும் இருக்கிறது. முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு, அவரை மனதில் நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்திற்குள் பயணம் செய்வோம். இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு ஒரு பிரியாணி இலை தேவை. பண ஈர்ப்பு விதி என்றாலே அதற்கு பிரியாணி இலை ரொம்ப ரொம்ப முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு கிழிசல் இல்லாத பிரியாணி இலையை எடுத்து, ஒரு நீல நிற பேனாவை எடுத்து அந்த இலையில் ஆங்கிலத்தில் ‘I Attract Money’ என்ற வார்த்தையை எழுதி விட்டு அதன் கீழே 999 என்ற நம்பரை எழுதி, இந்த பிரியாணி இலையை கையில் வைத்துக்கொண்டு, இந்த மந்திர வார்த்தையை 9 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் குபேரருக்கு சிலை, முருகர் திருவுருவப்படம் இருந்தால் அந்த கடவுளின் முன்பாகவே இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.
இந்த மந்திர வார்த்தையை சொல்லிவிட்டு, கையில் இருக்கும் பிரியாணி இலையே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். 48 நாட்களுக்கு இதற்கு சக்தி இருக்கும். நீங்கள் சொன்ன மந்திர வார்த்தை இந்த பிரியாணி இலை தன்னகத்தே ஈர்த்து, உங்களுக்கு பணத்தை ஈர்த்து தரும் வேலையை இந்த பிரியாணி இலை செய்ய தொடங்கும்.
பணம் வரவும் கடன் தீரவும் தேவையான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். முயற்சிகளில் வரும் தடைகளை உடைத்து, பணவரவை உண்டாக்கக் கூடிய வேலையை இந்த பரிகாரம் செய்து கொடுக்கும். குறிப்பாக இந்த பரிகாரத்தை நாளைய தினம் காலை 9:00 மணிக்கு செய்யலாம் அல்லது 9:09 மணிக்கு செய்யலாம். காலை நேரத்தை தவறவிட்டவர்கள்.
இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல் விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்.
மாலை 9:00 மணிக்கு அல்லது 9:09 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. இந்த பிரபஞ்சம் நீங்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கும். ஆனால் கேட்கும்போது கொஞ்சம் நம்பிக்கையோடு கேட்டுப்பாருங்களேன். 48 நாள் கழித்து பிரியாணி இலையை எடுத்து நெருப்பில் பொசிக்கு விடுங்கள். நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்லதாவது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
The post 9-9-2024 அன்று செய்ய வேண்டிய பண வசிய பரிகாரம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.