லீவே இல்லாமல் 103 நாள் வேலை செய்த ஊழியர்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

சீனாவில் 103 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த ஊழியர் உடல் உறுப்பு செயலிழந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சீனா மாகாணத்தில் 30 வயதான அபாவ் என்ற நபர் கிழக்கு சீனாவில் செஞ்சியான் மாகாணத்தில் உள்ள சோசவுன் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காண்ட்ராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைக்கு சேர்ந்திருக்கின்றார். இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்த அபாவ் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அன்று மட்டும் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு தனது டாக்குமெண்டரியில் ஓய்வெடுத்து இருக்கின்றார்.

தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது. சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சு திணறலால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழப்புக்கு தொடர்ச்சியாக வேலை வாங்கிய நிறுவனம் தான் காரணம் என்று அபாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

அபாவின் உயிரிழப்புக்கு நிறுவனம் 20% காரணம் என்று கூறிய நீதிமன்றம் அபாவின் குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 100 யுவான் உட்பட 400 யுவான் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கின்றது. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக வேலைப்பளு காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகளும் சராசரி குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மையும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

The post லீவே இல்லாமல் 103 நாள் வேலை செய்த ஊழியர்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…! first appeared on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.