தமிழக வெற்றி கழக மாநாடு… இதெல்லாம் கட்டாயம் பாலோவ் பண்ணனும்… கட்டுப்பாடு விதித்த காவல்துறை..!

தமிழக வெற்றி கழகம் சார்பாக நடைபெறும் மாநாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருக்கின்றது.

தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் மாநாடு நடைபெறும் இடம், வாகனம் நிறுத்தும் இடம், உள்ளிட்ட மாநாடு சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்திருக்கின்றது.

இது தொடர்பாக காவல்துறை தெரிவித்திருந்ததாவது “மாநாடு 2 மணிக்கு தொடங்கினால் 1:30 அனைவரும் மாநாடு நடைபெறும் பந்தலுக்கு வந்து விட வேண்டும். இரண்டு மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை பேர் வர இருக்கிறார்கள். எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் அனைத்துமே அவரவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அளித்த கணக்குப்படி வாகனங்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வர முடியும். ஆனால் 50000 பேர் வருவார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். மீறி வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர நெரிசல் இல்லாமல் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

நடிகர் விஜய் வருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்ட் அமைக்க வேண்டும். மாநாடு நடத்தப்படும் இடம் அருகில் உள்ள கிணறுகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மின் வயர்கள் செல்லும் வழியில் நாற்காலிகள் போடக்கூடாது. மேடையின் அளவு என்ன? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள் என்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாநாடு நடக்கும் பகுதியில் பட்டாசு வெடித்தல், வான வேடிக்கை உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட வேண்டும். விஐபி பாஸ் வழங்கப்படும் விவரங்கள் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் மாநாடு முழுவதும் பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற பல நிபந்தனைகள் விடுக்கப்பட்டிருக்கின்றது.

The post தமிழக வெற்றி கழக மாநாடு… இதெல்லாம் கட்டாயம் பாலோவ் பண்ணனும்… கட்டுப்பாடு விதித்த காவல்துறை..! first appeared on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.