ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு பெண் குழந்தை!

சென்னை: நடிகர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் தமிழிலும் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீரை திருமணம் செய்து கொண்டார். சில ஹாலிவுட் படங்களிலும் தீபிகா நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை தீபிகா அறிவித்தார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.