Doctor Vikatan: ஆஸ்துமா, வீஸிங் பிரச்னைகள் உள்ளவர்கள் Swimming செய்யலாமா?

Doctor Vikatan: ஆஸ்துமா, வீஸிங் பிரச்னைகள் உள்ளவர்கள் workout செய்யலாமா... Swimming பண்ணலாமா.. உடற்பயிற்சிகள் செய்தால் இந்தப் பிரச்னைகளின் தீவிரம் அதிகரிக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்    

ஷீபா தேவராஜ்

பொதுவாகவே உடற்பயிற்சிகள் செய்வது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். அடிக்கடி உடல்நல பாதிப்புக்குள்ளாவதில் இருந்து தடுக்கும்.

நீங்கள் கேட்டுள்ளபடி ஆஸ்துமா, வீஸிங் பாதிப்புள்ளவர்கள் நிச்சயம் உடற்பயிற்சிகள் செய்யலாம். உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் அவர்களது இதயத்தின் செயல்திறன் மேம்படும்.

உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் வீஸிங் மற்றும் ஆஸ்துமா பாதிப்பின் தீவிரம் குறைய நிறைய வாய்ப்புகள் உண்டு. இத்தகைய பிரச்னைகள் உள்ளவர்கள் முதலில் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டு, மிதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ரொம்பவும் தீவிரமாக எந்தப் பயிற்சியையும் செய்ய வேண்டாம்.

ஆஸ்துமா

நீங்களாக ஏதேனும் பயிற்சிகளைச் செய்வதற்கு பதில் உடற்பயிற்சி ஆலோசகரின் வழிகாட்டுதலோடு செய்வதுதான் சரியானது. வொர்க் அவுட் செய்யும்போது அவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலர் மற்றும் மருந்துகளை எப்போதும் உடன் வைத்திருப்பது பாதுகாப்பானது. ஆஸ்துமா, வீஸிங் பிரச்னைகளோடு வருபவர்கள், உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்கியதும் அவர்களது சுவாசப் பிரச்னை சரியாகி, பாதிப்பின் தீவிரம் வெகுவாகக் குறைந்ததை என் அனுபவத்திலும் பார்த்திருக்கிறேன். கூடவே, அவர்களது உடல் திறனும் மேம்படும்.

ஆஸ்துமா, வீஸிங் பாதிப்புகள் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி (Swimming) செய்வதும் மிகவும் நல்லது. எந்தப் பயிற்சியானாலும் நிபுணர்களின் வழிகாட்டுதலோடு செய்வது பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.