8-9-2023 பஞ்சமி திதி வழிபாடு
பண கஷ்டத்தை எளிமையாக, விரைவில் சரி செய்ய வேண்டும் என்றால் அதற்கு உகந்த ஒரு பொருள் இருக்கிறது. அந்த ஒரு பொருளை பயன்படுத்தி வழிபாடு செய்யும் பட்சத்தில் உங்களது எவ்வளவு பெரிய பண கஷ்டத்தை வேண்டும் என்றாலும் சுலபமாக தீர்க்க முடியும். உங்கள் பண கஷ்டத்தை தீர்க்கும் அந்த ஒரு பொருள் என்ன, வாராகிக்கு அந்த பொருளை எப்படி மாலையாக கட்டிப் போட வேண்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பண கஷ்டம் தீர வாராஹி வழிபாடு
பணக்கஷ்டத்தை தீர்த்து வைக்கக்கூடிய எளிய தாந்த்ரீக பொருள் என்றால் அது ஏலக்காய் தான். இது மகாலட்சுமிக்கு விஷ்ணு பகவானுக்கு ரொம்பவும் பிடித்த ஒரு பொருள். பண வசியத்தை ஏற்படுத்தக் கூடிய பொருள். இந்த பொருள் வாராஹிக்கும் உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. 9, 11, 27, 51, இப்படி உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஏலக்காய் காய்ந்து போய் இருக்கக் கூடாது. பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். ஒரு மஞ்சள் நிற நூல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த ஏலக்காய்களை கோர்க்க வேண்டும். என்னுடைய பண கஷ்டம் தீர வேண்டும் என்று சொல்லாதீர்கள். ‘செல்வ செழிப்பில் நான் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் வாராஹி தாயே!’ என்று அவளிடம் வரத்தை கேட்டுக் கொண்டே ஏலக்காய் மாலையை கோர்த்து இந்த மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் வாராஹியின் சிலை, திருவுருவப்படத்திற்கு போடலாம். எங்கள் வீட்டில் வாராஹிம் சிலை இல்லை திருவுருவப்படம் இல்லை என்ன செய்வது.
சின்னதாக ஒரு மண் அகல் விளக்கை எடுத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி, இதுதான் வாராஹி என்று நினைத்து இந்த அகல் விளக்கை சுற்றி இந்த மாலையை போடலாம். உங்கள் வீட்டு பக்கத்தில் வாராஹி சன்னிதானம் இருக்கிறதா, அந்த சன்னிதானத்திற்கு கொண்டு போய் இந்த மாலையை போட்டுவிட்டு செல்வ செழிப்பில் நீங்கள் பல மடங்கு உயர வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தாலும் அந்த வேண்டுதல் பலிக்கும்.
உங்களுடைய பண கஷ்டத்தை கடன் சுமையை உடனே குறைக்கக்கூடிய சக்தி இந்த ஏலக்காய் மாலைக்கு உண்டு. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பஞ்சமி திதி. இந்த நாளில் வாராகி வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. நாளை மாலை 6 மணிக்கு மேலாக இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம் கோவிலிலும் செய்யலாம். யாரும் நாளைய தினத்தில் வழிபாட்டை தவற விடாதீங்க. வீட்டில் இந்த ஏலக்காய் மாலையை போட்டால் அந்த மாலையை என்ன செய்வது.
எந்த ஒரு உணவுப் பொருளையும் வீணாக்கக்கூடாது. அந்த ஏலக்காய் மாலையை மூன்று நாள் கழித்து எடுத்து ஏதாவது பிரசாதம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். இனிப்பு பலகாரங்கள் செய்வதற்கு அந்த பிரசாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். செய்த பிரசாதத்தை நாலு பேருக்கு அன்னதானம் செய்தால் இன்னும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் விநாயக சதுர்த்தி பரிகாரம்
இயலாதவர்கள், பசியோடு இருப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், யாசகம் கேட்பவர்களுக்கு இந்த பிரசாதத்தை தானம் கொடுக்கலாம். நல்லதை நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும். நம்பிக்கையோடு பரிகாரங்கள் செய்தால் பலன் நமக்கு சாதகமாக வரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
The post 8-9-2023 பஞ்சமி திதி வழிபாடு appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.