பொது சிவில் சட்டம் குறித்து 23-வது சட்ட ஆணையம் ஆய்வு செய்யும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் சட்ட ஆணையம் இயங்குகிறது. இதன் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படும் சட்ட ஆணைய குழு, சட்ட சீர்திருத்தங்கள் குறித்துஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைசெய்து வருகிறது. அந்த வகையில் 22-வது சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி 23-வது சட்ட ஆணைய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்தக் குழுவின்ஆய்வு வரம்பில் பொது சிவில் சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், “ஏழை மக்களுக்கு எதிராக அல்லது வழக்கத்தில் இல்லாத சட்டங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்துஅவற்றை நீக்குவது குறித்து பரிந்துரை செய்யும். மேலும் மாநில கொள்கையின் நெறிமுறை கோட்பாடுகளின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை சட்ட ஆணையம் ஆய்வு செய்யும். இவற்றை மேம்படுத்துதல் மற்றும் சீர்திருத்தம் செய்வதற்கான வழிவகைகளையும் ஆணையம் பரிந்துரை செய்யும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.