பண நெருக்கடியை தீர்க்கும் குபேர தீபம்

செல்வ வளத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குபேர பகவான். காரணம் இவரிடம் தான் சங்க நிதி மற்றும் பதும நிதி இருக்கிறார்கள். மேலும் சிவபெருமானிடம் இருந்து வாங்கிய வரத்தினால்தான் அவர் செல்வங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இவருடைய அருள் யாருக்கு பரிபூரணமாக கிடைக்கிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் பண தட்டுப்பாடு என்பது இருக்கவே இருக்காது. அவ்வளவு சிறப்பு மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர் தான் குபேர பகவான். அப்படிப்பட்ட குபேர பகவானின் அருளை பெறுவதற்கும் பண நெருக்கடியை தீர்ப்பதற்கும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண நெருக்கடியை தீர்க்கும் குபேர தீபம்

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய குபேர பகவான் அருளை பெற வேண்டும் என்றால் குபேர பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று குபேர பூஜை செய்ய வேண்டும் என்று பலரும் கூறியிருப்பார்கள். குபேர பகவானுக்கு உகந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து செய்யக்கூடிய பல எளிமையான பூஜைகள் இருக்கின்றன. இந்த பூஜைகளை முறையாக செய்பவர்களுக்கு குபேர பகவானின் அருள் கிடைக்கும். இப்படி பூஜைகள் செய்ய நேரமில்லை என்பவர்களும் பூஜைகள் செய்யும் அளவிற்கு பொருள் வசதி இல்லை என்பவர்களும் வீட்டில் மிகவும் எளிமையான ஒரு தீபத்தை எந்த நேரத்தில் எப்படி ஏற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

வியாழக்கிழமை அன்றுதான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். காலையிலும் மாலையிலும் ஏற்ற வேண்டும். காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மற்றும் இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் குரு ஹோரை என்பது வரும். குரு என்பவர் பெருஞ்செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர். அவருடைய நேரத்தில் குபேர பகவானை நினைத்து தீபமேற்றி வழிபாடு செய்தோம் என்றால் குரு மற்றும் குபேர பகவானின் அருள் நமக்கு கிடைக்கப்பெற்று பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும். இப்பொழுது தீபத்தை ஏற்றும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதற்கு வீட்டில் ஏற்றக்கூடிய விளக்கை பயன்படுத்தலாம் அல்லது குபேர விளக்கு இருக்கும் பட்சத்தில் குபேர விளக்கை பயன்படுத்தலாம் அல்லது சாதாரண ஒரு அகல் விளக்கை கூட பயன்படுத்தலாம். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வாசனை நிறைந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். வடக்கு தான் குபேர பகவானுக்குரிய திசை. அதனால் இந்த விளக்கு வடக்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். வீட்டில் குபேர தீபம் ஏற்றுப்பவர்கள் வடக்கு திசை பார்த்தவாறு தான் குபேர தீபத்தை வைத்து ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு “ஓம் குபேராய வசி வசி” என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். இந்த விளக்கு தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் தெரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அதை குளிர வைத்து விடலாம். இரவிலும் இதே போல் எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை இந்த தீபம் எறியட்டும். தீபத்தை ஏற்றிவிட்டு மறுபடியும் மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும். ஒன்பது மணிக்குப் பிறகு தீபத்தை குளிர வைத்து எடுத்து வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: இழந்த சொத்தை மீட்டு தரும் பரிகாரம்

இந்த எளிமையான குபேர தீபத்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர்ச்சியாக ஏற்றி குபேர பகவானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய பண நெருக்கடி என்பது படிப்படியாக குறைந்து செல்வ செழித்துடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post பண நெருக்கடியை தீர்க்கும் குபேர தீபம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.