Bigg Boss Tamil 8: `வந்தாச்சு புது பிக் பாஸ்... எப்படி இருக்கப் போகிறது இந்த சீசன்? | VJS
`பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கென பெரியதொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. ஆரம்பம் முதலே வருகிற `பிக்பாஸ் சீசன் 8 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவில்லை. யார் அந்த புது தொகுப்பாளர்? எனப் பலரும் பல்வேறு கோணங்களில் அலச பலரது கணிப்பும் இப்பொழுது சரியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. புது லோகோவை விடவும் புதிய தொகுப்பாளர் தான் கவனம் ஈர்க்கிறார். பலரும் நினைத்திருந்த மாதிரியே விஜய் சேதுபதி தான் புதிய தொகுப்பாளர். இவர் ஏற்கனவே ரியாலிட்டி ஷோக்களுக்கு பரிச்சயமானவர் என்றாலும் இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
`நம்ம ஊரு ஹீரோ என்கிற தலைப்பில் சன் டிவியில் இவர் நடத்திய ரியாலிட்டி ஷோ வெகுவாக பேசப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தான் இவருடைய சென்டிமென்ட் பக்கம் ஆடியன்ஸூக்கு அதிக அளவில் தெரிய வந்தது. அடுத்ததாக அதே சேனலில் `மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார். சாப்பாடு பிரியரான இவர் அந்த நிகழ்ச்சியில் தனக்குக் கொடுத்த பங்கினை சரியாகவே செய்திருந்தார்.
ஆனால், அது எல்லாவற்றை விடவும் வித்தியாசமான நிகழ்ச்சிதான் இந்த பிக்பாஸ். அழுகை, கோபம், காதல், துரோகம் எனப் பல விஷயங்களை இந்த வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் வெளிக்காட்டுவார்கள். அவர்களை கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டவும் வேண்டும். கமல்ஹாசன் இத்தனை ஆண்டுகள் அதனை நேர்த்தியாகவே கையாண்டார். அவர் இடத்தில் இவரைப் பொருத்திப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு ப்ரெஷ் ஆக இந்த ஷோவினை எதிர்பார்த்தால் நிச்சயம் என்டர்டெயினாக இருக்கும்!
விஜய் சேதுபதி இனி கமல்ஹாசன் இடத்தில்... எப்படி இருக்கப் போகிறது பிக்பாஸ் சீசன் 8?! உங்களுடைய கருத்துகளை மறக்காம கமென்ட் பண்ணுங்க!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.