காந்தி – விநாயக் ஒன்னா வந்தா எப்படி இருக்கும்? வைரலாகும் விஜய் அஜித் புகைப்படம்
Ajith Vijay: நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கோட் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட 5000 ஸ்கிரீனில் கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் தான் அதிக ஸ்கிரீனில் திரைப்படம் வெளியாகிறது.
ஏற்கனவே கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். ஆரம்பத்தில் எந்த ஒரு ஹைப்பும் இல்லாத நிலையில் கடந்த ஒரு வார காலமாக கோட் திரைப்படத்தை பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. வெளியான ஒவ்வொரு செய்திகளும் ரசிகர்களுக்கு ட்ரீட் வைப்பதை போல அமைந்தது.
அதிலும் கோட் படத்தில் கேமியோ ரோல் அதிகம் இருப்பதாகவும் படத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே சிவகார்த்திகேயன் தோனி திரிஷா ஆகியோர் படத்தில் வருவதாக சொல்லி இருந்த நிலையில் விஜயகாந்த் எஐ மூலமாக இந்த படத்தில் வருகிறார். ரசிகரக்ளின் இன்னொரு எதிர்பார்ப்பு என்னவெனில் படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு ரெஃபரன்ஸ் இருக்கும் என வெங்கட் பிரபு கூறியது இன்னும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக விஜய் படத்தை பார்க்க அஜித் ரசிகர்களையும் வெங்கட் பிரபு தூண்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் அஜித் புகைப்படம் வருகிறதா அவர் வீடியோ எதுவும் வருகிறதா அல்லது அவர் பேசிய சில வசனங்கள் வருகிறதா இல்லை ஒரு சீனில் அஜித்தே வருகிறாரா என்ற ஒரு ஆர்வம் அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் இப்போது அஜித் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் காந்தி கேரக்டரில் விஜயும் மங்காத்தா படத்தில் விநாயக்காக வரும் அஜித் புகைப்படமும் இணைந்து கோட் திரைப்படத்தில் ஒன்றாக இருவரும் வந்தால் எப்படி இருக்கும் என்பது போல ஒரு கற்பனையான புகைப்படத்தை இணையவாசிகள் சமூக வலைதளங்களில் உலா விட்டிருக்கின்றனர். அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.