நீங்க நடிச்சா போதும்… இந்த கிளாமர் ஆசை வேறையா? பிரியா பவானி சங்கர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்

PriyaBhavaniShankar:  தமிழ் சினிமா ரசிகர்கள் சமீப காலமாகவே பிரியா பவானிசங்கரை கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர் சமீபத்தில் கிளாமர் குறித்து பேசி இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவியிருக்கிறது.

பிரபல தமிழ் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். அவருக்கு விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைத்த பாப்புலாரிட்டியை பயன்படுத்திக் கொண்டு மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தார்.

இதையும் படிங்க:  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…

அதைத்தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தது. பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் கிடைக்கும் அளவுக்கு நடித்து வந்தார். இருந்தும் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் மோசமான விமர்சனங்களை குறித்து வருகிறது.

இதனால் பிரியா பவானிசங்கரை பலரும் ராசியில்லாத நடிகை என கலாய்த்து வந்தனர். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான டிமான்டி காலனி 2 மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. அதில் பிரியா வாணி சங்கரின் நடிப்பும் பலரிடமும் பாராட்டுக்களை பெற்றது. தற்போது தமிழில் பிளாக் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் ஜிப்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Priya bhavani shankar

ஆனால் எவ்வளவு கலாய்த்தாலும் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய நடிப்பில் ஒரே ஸ்டைலைதான் பாலோ செய்து வருகிறார். அவருடைய உடையில் எப்பொழுதும் ஒரு கண்ணியத்தை வைத்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க:  விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?

இந்நிலையில் அவரிடம் மாடர்ன் உடை குறித்து ஒரு பேட்டியில் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியா பவானிசங்கர்  கிளாமராக நடித்த எளிதாக சினிமாவில் முன்னேறி விடலாம் என கூறப்படுவதை நான் நம்ப மாட்டேன். அப்படி நடிப்பது ரொம்பவே சவாலான விஷயம். எனக்கு இப்படி நடிப்பது தான் இயல்பாக இருக்கிறது. 

நான் கிளாமராக நடிக்காமல் இப்படி நடிப்பதை தான் என்னுடைய ரசிகர்களும் விரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நீங்க நடிச்சா மட்டும் போதும். மத்ததெல்லாம் அப்புறம் யோசிக்கலாம் எனவும் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.