இழந்த சொத்தை மீட்டு தரும் பரிகாரம்

இழந்த சொத்துக்கள், பொருட்கள், உறவுகள் கூட திரும்ப கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். உலகிலேயே பணக்காரராக இருந்த குபேரன் கூட ஒரு சமயத்தில் தன் நாடு, நகரங்களை எல்லாம் இழந்து வீதிக்கு வந்தார். அது போல சாதாரண மனிதனும், பல நேரங்களில் பலவற்றை அறியாமலும், அறிந்தும் இழந்து விடுகிறான். ஏமாற்றிப் பிடுங்குபவர்கள் நம்மை சுற்றி பலர் உள்ளனர். அறியாமையால் ஏமாறுபவர்களும் நம்முள் இருக்கின்றோம். எப்படி இழந்தவையும் மீண்டும் திரும்பப் பெற செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நிதி சார்ந்த அத்தனை பொறுப்புகளும் குபேர பகவான் இடத்தில் தான் சிவபெருமான் ஒப்படைத்தார். தன் கடமையை சரிவர ஆற்றிய குபேரனுக்கு கூட, யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ஒரு முறை பூதாகரமாக ஒரு பிரச்சனை வெடித்தது. இதனால் தன் சொத்துக்கள் யாவற்றையும் இழந்து மீண்டும் வறுமையில் வாடினார்.

தனக்கென இருந்த நாடு, நகரங்கள், சொத்துக்கள், பொருட்கள் என அனைத்தையும் இழந்ததால் மிகவும் விரக்தி உற்று இருந்த குபேரன், சிவபெருமான் இடத்தில் சென்று மன்றாடினார். இந்த நிலையிலிருந்து நான் வெளிவர என்ன செய்வது? என்று கேட்ட போது சிவபெருமான் எளிய ஒரு பரிகாரத்தை செய்யச் சொன்னார்.

வீட்டிற்கு சென்றவுடன் ஒரு நெல்லி மரத்தை நட்டு வை போதும் என்றார். வீட்டிற்கு வந்த குபேரன் நெல்லி மரத்தை ஈசன் சொன்னது போல நட்டு வைத்து வளர்த்து வந்தார். நெல்லி மரம் பூத்துக் குலுங்கி வளர்ந்து காய்க்க ஆரம்பித்ததும், பிரச்சனைகள் யாவும் தீர்ந்து இழந்தவை அத்தனையும் திரும்பப் பெற்றார். நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உண்டு. இதனை கருத்தில் கொண்டு தான் சிவபெருமான் இப்பரிகாரத்தை செய்ய சொன்னார்.

நெல்லி மரத்திற்கும், நெல்லிக்காய், நெல்லிக்கனி ஆகியவற்றிற்கும் மகாலட்சுமியின் பரிபூரண சக்தி உண்டு. நம் வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் அவ்வளவு பலன்களையும் நாம் பெற முடியும். சக்தி வாய்ந்த இந்த நெல்லிக்காய் மரம் நம் வீட்டில் இல்லாவிட்டாலும், நெல்லிக் கனியை தினமும் சாப்பிட்டு வர குபேர அருளும், மகாலட்சுமியின் கடைக் கண் பார்வையும் நம் மீது படும். மேலும் ஆரோக்கியமும் வலுவாகும், திடகாத்திரமான தேகம் அமையும்.

இதையும் படிக்கலாமே:
செல்வ வளத்துடன் வாழ பெருமாள் வழிபாடு

வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளில் நெல்லிக்காயில் செய்த நெல்லிக்காய் சாதம் பிரசாதமாக தயாரித்து கோவிலுக்குச் சென்று அங்குள்ள எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தானம் செய்யுங்கள். நெல்லி சாதம் தானம் செய்ய செய்ய நீங்கள் இழந்தவை யாவும் திரும்ப அடைவீர்கள். உங்களை ஏமாற்றி அடைந்த சொத்துக்கள் கூட திரும்ப கிடைக்கும். தொலைத்த பொருட்கள் உங்களை தேடி தானாக வந்து சேரும். விட்டு சென்ற உறவுகளும், உங்கள் பிரிவின் துயர் நீக்க உங்களை புரிந்து கொண்டு மீண்டும் உங்களை வந்தடைவார்கள். எளிய இந்த தானத்தை பரிகாரமாக ஆறு வாரங்கள் செய்து பாருங்கள், நல்ல பலன்கள் கிட்டும்.

The post இழந்த சொத்தை மீட்டு தரும் பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.