நாக சதுர்த்தி வழிபாடு 2024
நாளைய தினம் கருட பஞ்சமி. கருட பஞ்சமிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகின்ற நாக சதுர்த்தியானது இன்று வந்திருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷத்தால் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள், இன்றைய தினம் வீட்டில் இருந்தபடியே இந்த நாகசதுர்த்தி வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாகசதுர்த்தி 2024
பொதுவாக நாகசதுர்த்தி என்றால் நாகர் சிலை உள்ள இடம், புற்று உள்ள இடங்களுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்வது வழக்கமாக இருக்கும். இன்றைய தினம் உங்களால் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்ய முடியவில்லை என்றாலும் சரி, வீட்டிலேயே நீங்கள் நாகராஜாவின் ஆசிர்வாதத்தை பெற முடியும். அதற்கு உண்டான வழிபாடு தான் இது.
நிறைய பேர் வீடுகளில் நாகராஜாவின் திருவுருவம் படம் இருக்கும். அப்படி இல்லை என்றால் நாகர் சிலையை வைத்து வழிபாடு செய்யக்கூடிய பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டு பூஜை அறையில் நாகர் சிலை இருந்தால் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
இன்று பச்சை பயிறால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை நாகராஜாவுக்கு வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து, குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் உங்கள் குடும்பத்தை பின் தொடரும் நாக தோஷம், ராகு கேது தோஷம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதற்கும் வாய்ப்பு இல்லை எங்கள் வீட்டில் நாகர் படமோ, நாக சிலையோ இல்லை என்றால் என்ன செய்வது. சின்னதாக ஒரு செப்பு கம்பி இருந்தால் கூட போதும். அதை பாம்பு போல சுற்றி தலையை கொஞ்சம் வளைத்து வைத்து, நாகர் சிலையை தயார் செய்து கொள்ளவும். இதையே நாகராக பாவித்து பால் அபிஷேகம் செய்து பச்சை பயிறு சுண்டல் வைத்து வழிபாடு செய்தாலும் உங்களுக்கு நாக தோஷம், ராகு கேது தோஷம் விளக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாகர் வழிபாடு செய்ய ராகு கால நேரம் தான் சிறந்தது என்று சொல்லுவார்கள். இன்று வியாழக்கிழமை மதியம் 1:30 மணியிலிருந்து 3:00மணி வரை ராகுகால நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தால் இந்த நேரத்தில் வழிபாட்டை செய்யலாம். இதில் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.
விளக்கு ஏற்றி வைத்து நாகராஜாவை மனதார நினைத்து 1 டம்பளர் பால், பூஜை அறையில் வைத்து நெய்வேதியம் செய்து மனப்பூர்வமாக இந்த நாக சதுர்த்தி வழிபாடு செய்தாலும் நிச்சயம் நல்லது நடக்கும்.
இதையும் படிக்கலாமே: ஓம் மந்திரத்தை கூறும் முறை
இந்த மதியம் ராகு கால நேரத்தில் வழிபாடு செய்ய தவற விட்டவர்கள், மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்வது நல்லது. நிச்சயம் நாகர் உங்களுக்கான ஆசீர்வாதத்தை வழங்குவார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
The post நாக சதுர்த்தி வழிபாடு 2024 appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.