கடந்த 10 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 453 பேர் உயிரிழப்பு: மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 2014-ல் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது 453 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

நமது நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடிய முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கை நடைமுறைக்குகொண்டுவரும் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. மனித மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும், மனித வாழ்க்கைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த தொழிலை செய்யும்படி எவரொருவர் பணித்தாலும் அவருக்கு 2 ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும்படி சட்டம் சொல்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.