குபேர சம்பத்து பெற பரிகாரம்

குபேரரின் கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் கோடான கோடி பணம் நம்மை தானாக தேடி வரும். இது நிதர்சனமான உண்மை. ஆனால் அந்த குபேரரின் கடைக்கண் பார்வையை நம் மேல் விழுச்செய்வதில் எத்தனை போராட்டங்கள். எவ்வளவுதான் உருண்டு பிரண்டு சாமி கும்பிட்டாலும், குபேரர் பார்வை நம் பக்கம் திரும்பவில்லை. நமக்கு மிஞ்சியது வறுமை தானே. இந்த வறுமையில் இருந்து மீள்வதற்கு ஒரு எளிமையான குபேர வழிபாட்டை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குபேர சம்பத்து கிடைக்க வழிபாடு

இந்த வழிபாட்டை தொடர்ந்து தினமும் 48 நாள் செய்ய முடியும் என்பவர்கள் செய்யலாம். முடியாது என்பவர்கள் 21 வெள்ளிக்கிழமை தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி பவுல் அல்லது பித்தளை சொம்பு எதுவாக இருந்தாலும், அதை நிரம்ப சிலரை காசுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் நாணயங்கள் அந்த சொம்பு நிரம்ப இருக்க வேண்டும்.

ஆகவே பெரிய பாத்திரமாக எடுக்காதீங்க. சின்ன பாத்திரமாக எடுத்து அதன் உள்ளே கொஞ்சம் நாணயங்களை போட்டாலும், அந்த பாத்திரம் நிரம்பி வழியும் படி பார்த்துக் கொள்ளுங்கள்‌ அந்த நாணயங்களுக்கு மேலே முடிந்தால் ஒரு வெள்ளி நாணயம், அல்லது தங்க நாணயம் வைக்கலாம். அந்த இரண்டு நாணயங்களும் இல்லாத பட்சத்தில் அதை தவிர்த்து விடுங்கள்.

இந்த நாணயங்களுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். தாழம்பூ குங்குமத்தைக் கொண்டு ‘ஓம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். ஒருநாள் பயன்படுத்திய குங்குமத்தை தினமும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். தவறு கிடையாது. ஏனென்றால் அவ்வளவு குங்குமத்தை வாங்கி வீணடிக்க கூடாது. தினமும் 108 அர்ச்சனை செய்ய குங்குமம் வாங்கினால் நிறைய குங்குமம் சேர்ந்து விடும்.

தினமும் உங்களால் இந்த குங்குமத்தை புதுசாக வாங்க முடியும் என்றால் வாங்கி, குபேரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தி இந்த குங்குமத்தை கோவிலுக்கு கொண்டு போய் அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். அதிலும் எந்த தவறும் கிடையாது. சரி, இப்போது வழிபாட்டை பார்ப்போம். பூஜை அறையில் வைத்திருக்கும் இந்த நாணய கலசத்திற்கு குங்கும அர்ச்சனை செய்து குபேரர் மந்திரத்தை சொல்லி, உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் நீங்க வேண்டும் குபேரனின் அருள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த பூஜையில் ஒரு டம்ளர் பால் நெய்வேதியமாக வைக்க வேண்டும். ஏலக்காய் பணங்கற்கண்டு சேர்த்த பாலை நெய்வேத்தியம் செய்யுங்கள். பூஜையில் இருக்க வேண்டிய விளக்கு தீப தூப ஆராதனைகளை எல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜையை மனப்பூர்வமாக செய்து முடித்துவிட்டு, தீப தூப ஆராத்தி காண்பித்து விட்டு இந்த பிரசாதத்தை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பருகலாம்.

நீங்கள் குபேரர் மந்திரத்தைச் 108 முறை சொல்லச் சொல்ல அந்த பூஜையறையில் இருக்கும் நாணயத்திற்கு குபேரரின் சக்தி கிடைத்துவிடும். இந்த நாணயத்தை ஒன்று கொண்டு போய் வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்தால், அந்த இடத்தில் லாபம் அதிகரிக்கும். வீட்டில் பீரோவில் இந்த நாணயத்தை வைத்தால், பணம் அந்த இடத்தில் நிறைய சேரும்.

இதையும் படிக்கலாமே: ஆடி மாதம் முதல் நாள் வாங்க வேண்டிய பொருள்

பர்ஸில் வையுங்கள். இப்படி இந்த நாணயத்தை நீங்கள் எந்த இடத்தில் எல்லாம் வைக்கிறீர்களோ அந்த இடத்தில் எல்லாம் நிச்சயம் குபேரர் அருளால் பணமழை பொழியும் என்பது நம்பிக்கை‌. 48 நாள் இந்த பூஜையை நிறைவு செய்த பிறகு, உங்கள் நிதி நிலைமையில் நல்ல மாற்றம் தெரியும். முடியாதவர்கள் 21 வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை முடித்துவிட்டு பலனை எதிர்பார்க்க வேண்டாம். அந்த குபேரரை கொண்டு வந்து பலனை உங்கள் கையில் கொடுத்து விடுவார். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

The post குபேர சம்பத்து பெற பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.