பந்துவீச்சு பயிற்சியாளர் ரேஸில் மூன்று பேர்?…முந்தப்போவது யார்!..

இந்திய கிரிக்கெட் அனி சமீபத்தில் அமெரிக்கா. மேற்கிந்திய தீவுகளில் நடந்து முடிந்த இருபது ஓவர் உலக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. உலகக் கோப்பையை வென்றுவிட மாட்டார்களா என பல ஆண்டுகளாக ஏங்கிக் காத்து நின்ற ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரையும் இந்த வெற்றி ஆனந்தக் கண்ணீர் விட வைத்தது.

ரோஹிட் சர்மா தலைமையில இந்த தொடரில் பங்கேற்கச் சென்றது இந்திய அணி. இறுதிப் போட்டியில் பலமிக்க தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. கடைசி ஓவர் வரை நீடித்த இந்தப் போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. வாகை சூடிவந்த வீரர்களுக்கு பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

அந்த மகிழ்ச்சிகள் ஒரு புறம் இருந்து வர, அனியின் முன்னனி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தங்களது ஓய்வினை அறிவித்தனர்.

Indian Bowling

Indian Bowling

அணியின் தலைமை பயிற்சியாளராக் இருந்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இருவது ஓவர் உலகக் கோப்பை தொடரோடு முடிவடைந்தது. அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார்.

இதே போல பவுலிங் கோச்சாக நியமிக்க மூன்று நபர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரான ஜாகீர் கான், தமிழகத்தை சேர்ந்த லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் பெயர்கள் பரிசீலனைப் பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே போல ஒரு சில சர்வதேச போட்டிகளில் மட்டுமே தலை காட்டி பந்து வீசிய வினய் குமாரின் பெயரும் பரீசீலனை பட்டியலை அடைந்திருப்பதாக பேசப்படுகிறது. இந்த மூன்று நபர்களில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிவர் ஜாகீர் கானே. அதிக விக்கெட்டுக வீழ்த்தியதும் இவரே.

The post பந்துவீச்சு பயிற்சியாளர் ரேஸில் மூன்று பேர்?…முந்தப்போவது யார்!.. first appeared on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.