``என்னை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்ல அவர் யார்? - ஓ.பி.எஸ் ஆவேசம்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

"தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படுமா..?"

"பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் கள்ளச்சாராயத்தையும், விஷ சாராயத்தையும் ஒழிக்க முடியும் என்பது எனது கருத்து, அரசு அதை செய்ய வேண்டும்..!".

"சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளாரே..."

"ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். சசிகலாவின் தொண்டர்களை சந்திக்கும் முயற்சி வெற்றி பெறட்டும். 90 சதவிகித தொண்டர்களை இணைத்ததாக சசிகலா கூறியதை வரவேற்கிறேன்."

எடப்பாடி, ஓபிஎஸ் 

"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எப்படியுள்ளது?"


"சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு கிடக்கிறது. அதை  முதல்வர் சரிப்படுத்த வேண்டும், செய்யத் தவறினால் அடுத்த முறை ஆட்சிக்கு வருவது கேள்விக்குறியாகிவிடும்,  படுதோல்வி அடைவார்."

"மத்திய அரசு கொண்டுவந்த புதிய மூன்று சட்டங்கள் குறித்து ..."

"அவைகளை ஆங்கிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது"

ஓ.பி.எஸ்

"ஓபிஎஸ், ஒருபோதும் அதிமுகவுக்கு உண்மையாக இருந்தது கிடையாது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளாரே..."

"இதுகுறித்து நீண்ட விளக்கத்தை நேற்று அளித்திருக்கிறேன். இதற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாது, அவரைப்போல் நான் தெனாவட்டாகவோ, சர்வாதிகாரத்தோடோ பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். கட்சியை இணைப்பது தான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தும் கூட..".

"மன்னிப்புக் கடிதம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?"

"என்னை மன்னிப்பக் கடிதம் கொடுக்கச் சொல்ல அவர் யார்? பொதுச்செயலாளர் தேர்வு குறித்த வழக்கு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது"

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?"

"இரட்டைஇலைச் சின்னம் தேர்தலில் அங்கு போட்டியிடவில்லை. அதனால் இரு இலையுடன் கூடிய மாங்கனி அங்கு போட்டியிடுகிறது.."

"அதிமுகவுக்கு யார் தலைமை ஏற்க வேண்டும்..?"

``இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். ஒரு தொண்டர்தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும்".

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.