செங்கோல் குறித்து தவறாக பேசிய மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி-யை கைது செய்யக்கோரி மனு..

நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி வெங்கடேசனின் செங்கோல் பற்றிய பேச்சு கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பதை அவமதித்த மதுரை எம்.பி வெங்கடேசனை கைது செய்ய வேண்டும் என ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர். மதுரையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. டி.ஆர்.ஓ சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூக நலத்திட்ட பாதுகாப்பு அலுவலர் சங்கீதா உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.


இது தொடர்பாக ஆலய பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலாளர் அளித்த மனுவில் கூறும்போது, "எம்.பி. வெங்கடேசன் இந்து சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பால் பேசி வருகிறார். இதனால் துறவிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் புகார் அளித்து வருகின்றனர். வெங்கடேசனின் விஷம பேச்சுகள், மதகலவரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அவரை கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.��


�இப்படி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் செங்கோலை பற்றி பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இது போல் அவர் பேசியிருக்கிறார். இவருடைய பேச்சுக்கள் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். அது மட்டும் கிடையாது, இவரை கைது செய்ய வேண்டும் என்று ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மனு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Input & Image courtesy:� News�

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.