Kissing Disease: ``முத்தம் கொடுப்பதன் மூலம் இந்த நோய் பரவும் - எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு!

புதிய யுகத்தின் புதிய தொற்று

18-ம் நூற்றாண்டின் இறுதி வரை Kissing Disease என்ற ஒரு தொற்றுநோய் கண்டறியப்படவில்லை. 1920ம் ஆண்டுக்குப் பிறகே முத்தத்தினால் புதுவித தொற்றுநோய் உண்டாகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இயல்பான தொற்றாக மாறிவிட்ட Kissing Disease, தற்போது 35 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 90 சதவிகிதம் பேரை பாதித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

Kissing

இதெல்லாம் நமக்குத் தேவையா?

புதிய நபர்களைக் கட்டியணைப்பது, அன்பைப் பரிமாறும் அடையாளமாக முத்தமிட்டுக் கொள்வது எல்லாம் இயல்பாகிவரும் இன்றைய சூழலில் Kissing Disease பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம்.

நோய் பரப்பும் ஊடகம்

நோய் பரப்பும் மிகப்பெரிய ஊடகம் எச்சில் (Saliva) என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கொரோனா தொற்று அந்த விழிப்புணர்வை நமக்கு இன்னும் அழுத்தமாகப் புரிய வைத்தது. இந்த எச்சிலின் வழியாக Kissing Disease பரவி வருகிறது.

எப்படி பரவும்?

Infectious Mononucleosis என்பதுதான் முத்தநோய்க்கான மருத்துவப் பெயர். இந்தத் தொற்றானது முத்தத்தின் மூலமே அதிகம் பரவுகிறது என்பதை பல பரிசோதனைகளின் மூலம் ஆல்ஃப்ரெட் இவான்ஸ் என்கிற அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் உறுதிபடுத்தினார். அதன்பிறகே இதற்கு Kissing Disease என்கிற செல்லப்பெயர் வந்தது.

EBV காய்ச்சல்

மோனோநியூக்ளியஸ் தொற்றுக்கு எச்சிலின் மூலம் பரவும் Epstein-Barr Virus காரணமாக உள்ளது. இதனால் சுருக்கமாக EBV என்று இந்தத் தொற்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு Glanudlar Fever என்கிற பெயரும் உண்டு. அரிதாக பாலியல் உறுப்பின் சுரப்புகள், ரத்தம் போன்றவற்றின் மூலமும் பரவலாம். அதேபோல் தும்மல், இருமல், ஒருவர் பயன்படுத்திய டம்ளரில் தண்ணீர் அருந்துவது, இன்னொருவரின் டூத் பிரஷ்ஷை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளாலும் தொற்று பரவக்கூடும்.

Kissing

என்ன செய்யும்?

EBV தொற்றினால் கல்லீரல் அல்லது மண்ணீரலில் சுருக்கம் உண்டாகலாம். சமயங்களில் மண்ணீரலில் காயங்களும் உண்டாகலாம். மஞ்சள் காமாலையையும் EBV உண்டாக்கும் சாத்தியம் உண்டு.

இவைதான் அறிகுறிகள்

தலைவலி, அதிக உடல்சோர்வு, தொண்டையில் புண் அல்லது வலி, கழுத்துப்பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகள் பெரிதாவது, உடலில் ஆங்காங்கே சிவந்து போவது (Rashes) போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. வைரஸ் தொற்று ஏற்பட்டவர் குணமடைய 2 முதல் 4 வாரங்கள் வரை தேவைப்படும். குணமான பின்பும் அடுத்த சில மாதங்களுக்கு அந்த அசௌகர்யம் உடலில் இருக்கலாம்.

கண்டுபிடிக்கும் வழி

ரத்தப்பரிசோதனை செய்யும்போது அதில் பிரத்யேகமான ஆன்டிபாடிகள் அடங்கியிருப்பதை வைத்து EBV தொற்றினை உறுதி செய்யலாம்.

யாருக்கு ரிஸ்க்?

உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நாகரிக கலாசாரத்தை விரும்பிப் பின்பற்றி வருகின்றன. எனவே, இந்த மோனோநியூக்ளியோசிஸ் இனி மேற்கத்திய கலாசாரக் காதலர்களிடம் அதிகரிக்கலாம். குறிப்பாக, வயது வந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிகிச்சைகள் விவரம்

மோனோநியூக்ளியஸ் தொற்று வராமல் தவிர்க்க தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வரும் முன்னர் தடுப்பதே சிறப்பான சிகிச்சை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

EBV தொற்றுக்கு வழக்கமான காய்ச்சலுக்கான சிகிச்சைகள், வலிநிவாரணிகள், போதுமான ஓய்வு, திரவ உணவுகளைப் போதுமான அளவு எடுத்துக் கொள்வது என்று நோயாளியின் உடல்நிலைகேற்ப சிகிச்சைகள் வழங்கப்படும்.

Kissing

முத்தம் கொடுக்கலாமா… வேண்டாமா?

முத்தம் என்பது அன்பைப் பரிமாறத்தான். ஆனால், அந்த அன்பைக் கண்ட இடத்திலும் தாராளமயமாக்கினால் ரிஸ்க் ஏற்படவே செய்யும். பாரபட்சமில்லாமல் உங்களுக்கு அன்பு பெருக்கெடுத்தால் மோனோநியூக்ளியஸ் தொற்றுக்கும் நீங்கள் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

‘ஒன்றே நன்று‘ என்பதுபோல் வாழ்க்கைத்துணையுடன் மட்டுமே முத்த வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இதனால் எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் எப்போதும் போல் புகுந்து விளையாடலாம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.