போக்சோ வழக்கு: 4-வது முறையாக விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் - அவகாசம் கேட்கும் எடியூரப்பா!

பா.ஜ.க மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா (81), பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அந்தச் சிறுமியின் தாயார் அளித்த புகாரில், ``பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது மகளை அழைத்துக்கொண்டு, பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பாவின் இல்லத்திற்குச் பிப்ரவரி 2-ம் தேதி சென்றேன்.

போக்சோ சட்டம்

அங்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறுமியை தனியறையில் சந்தித்த போது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா இல்லையா என்பதை பரிசோதித்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் பெங்களூரு சதாசிவ நகர் காவல்துறை POCSO பிரிவு 8 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354 A ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்தப் புகார் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்போதே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கர்நாடக முதல்வரும், பா.ஜ.க தலைவருமான எடியூரப்பா, ``மக்களவை தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் என்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தப் புகார் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எடியூரப்பா

அந்த சிறுமி என்னிடம் வந்தபோது, சில மோசடி வழக்குகளில் சிக்கியிருப்பதாக உதவி கேட்டார். அவருக்கு நான் நிதியுதவியும் செய்தேன். அப்போது அந்த சிறுமி என்னிடம் சரியாக பேசவே இல்லை. அதனால் அவள் மனநிலை பாதிப்பில் இருக்கலாம் என்றே நினைத்தேன். மற்றபடி இந்தப் புகார் அடிப்படை ஆதாரமற்றது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், போக்சோ வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அந்த நோட்டீஸுக்கு தனது வழக்கறிஞர்கள் மூலம் பதிலளித்திருக்கும் எடியூரப்பா, தற்போது டெல்லியில் இருப்பதைக் காரணம் காட்டி, சிஐடி முன் ஆஜராக ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளார். விசாரணைக் குழுவினால் ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது அவர் நான்காவது முறையாக விசாரணைக்கு ஆஜராகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.