ரூ.300 நகையை ரூ.6 கோடிக்கு விற்ற ராஜஸ்தான் நபர்... அமெரிக்கப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.300 மதிப்புள்ள போலி நகையை அமெரிக்க பெண்ணிடம் ரூ.6 கோடிக்கு விற்று ஏமாற்றிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த செரிஷ் (Cherish) என்பவர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஜோஹ்ரி பஜாரிலுள்ள கடையில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகையை வாங்கியிருக்கிறார்.

FRAUD

இந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் இந்த நகை காட்சிப்படுத்தப்பட்டபோது ​​அது போலியானது என்று தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செரிஷ், நேராக ராஜஸ்தானுக்கு வந்து கடை உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்தார். ஆனால், கௌரவ் சோனி அவரின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

இதனால், செரிஷ் ஜெய்ப்பூர் போலீஸில் புகாரளித்தார். கூடவே, அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியையும் நாடினார். அதன்பின்னர், போலீஸார் இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் செரிஷ், 2022-ல் இன்ஸ்டாகிராம் மூலம் கௌரவ் சோனியைத் தொடர்புகொண்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நகைகளுக்காக ரூ.6 கோடி வரையில் அவருக்கு பணம் செலுத்தியிருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

Police

அதைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக கௌரவ் சோனியை போலீஸார் தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால், கௌரவ் சோனி தன்னுடைய தந்தை ராஜேந்திர சோனியுடன் தலைமறைவாகிவிட்டார். தற்போது, தனிப்படை அமைத்து அவர்களைத் தேடிவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.