மலாவி ராணுவ விமான விபத்து: துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு

லிலொங்வே: கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற யாரும் உயிர் பிழைக்கவில்லை. இதனை மலாவி நாட்டின் அதிபர் லாசரஸ் சக்வேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா, “இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் வருத்தப்படுகிறேன். துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. இது பெரும் சோகம்.” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.