ஜூன் 18-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்வதாக தகவல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 18 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரணாசி தான் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி தொகுதி. அங்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் மோடி வாரணாசி செல்வது இது முதல் முறையாகும். பிரதமர் வருகையை ஒட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகளை உள்ளூர் பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. மேலும், பிரதமரின் வருகையை முன்னிட்டு மாவட்ட அதிகாரிகள் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.