சிக்கல் தீர வராகி பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் தீர்க்கவே முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகும். அந்த பிரச்சினையை வெளியில் யாரிடமும் சொல்லக்கூட முடியாத அளவிற்கு மாட்டிக்கொண்டு தவிப்போம். கடவுளை தவிர்த்து வேறு யாராலும் இதை தீர்த்து வைக்க முடியாது என்ற நிலைக்கும் வந்து விடுவோம். அந்த நிலைக்கு வந்த பிறகு வராகி அம்மனை நினைத்து இந்த ஒன்றை மட்டும் மூன்று நாட்கள் தினமும் எழுதி வர உங்களுடைய தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழிகளை வாராகி அம்மன் தருவாள். அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வராகி அம்மனை வழிபட்டால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனை என்று வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் வாராகி அம்மனை முழுமனதோடு வழங்கி வந்தால் அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகுவதை உணர முடியும். அப்படிப்பட்ட வராகி அம்மனை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நமக்கு ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவை இல்லை. பூஜை அறையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. முடிந்த அளவிற்கு காலையில் எழுந்ததும் இந்த பரிகாரத்தை செய்யலாம் அல்லது இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. பெண்கள் தீட்டு நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. விருப்பம் இருப்பவர்கள் பூஜை அறையில் ஒரே ஒரு நெய்தீபத்தை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து முதலில் ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பேப்பரில் “ஓம் வாராகி தாயே போற்றி” என்று எழுத வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் எந்த சிக்கலில் தவித்துக்கொண்டு இருக்கிறீர்களோ அல்லது எந்த வேண்டுதல் உங்களுக்கு நிறைவேற வேண்டுமோ அதை ஒரே வரியில் எழுத வேண்டும். அடுத்ததாக 369 என்னும் எண்ணை 33 முறை எழுத வேண்டும். இப்படி எழுதும் பொழுது உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டதாகவே கற்பனை செய்து மன மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும்.

இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் இதே முறையில் இந்த எண்ணை எழுதி வர இந்த எண்ணின் சக்தியும் வாராகி அம்மனின் சக்தியும் ஒரு சேர இணைந்து நாம் வேண்டிய வேண்டுதல் நமக்கு நிறைவேற அருள் புரிவார்கள். முதல் நாள் எந்த நேரத்தில் நாம் எழுதினோமோ அதே நேரத்தில் தான் மீதம் இருக்கும் இரண்டு நாட்களும் எழுத வேண்டும். ஒரே ஒரு வேண்டுதல் அல்லது பிரச்சினையை தான் முன்வைத்து எழுத வேண்டும். அந்த பிரச்சனை தீர்ந்த பிறகு வேறு பிரச்சினைக்கும் எழுதலாம்.

இதையும் படிக்கலாமே: கெட்ட எண்ணம் கொண்டவர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த ரகசிய எண்ணை நாமும் முழு நம்பிக்கையுடன் எழுதி தீர்க்க முடியாத சிக்கலில் இருந்து வெளியே வருவோம்.

The post சிக்கல் தீர வராகி பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.