தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

 

 

தங்கம் விலை நேற்று முன் திஅன்ம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த நிலையில் நேற்று  விலை சற்று குறைந்து என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ர்ர்பாய் 6,860 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை  ரூபாய் 54,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

 

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,330 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,640 எனவும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையில் மாற்றமில்லை என்றாலும் வெள்லியின் விலை அதிகமாகியுள்ளது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 100.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,300.00 எனவும் விற்பனையாகி வருகிறது

 

 

Edited by Siva

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.