`நவீன் பட்நாயக்கை ஓய்வு பெற சொல்வது, மோடிக்கு சொல்லும் குறிப்பா?’ - அமித் ஷாவை சீண்டிய ப.சிதம்பரம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த அடுத்த நாளே, `பா.ஜ.க ஒருவேளை மீண்டும் ஆட்சியமைத்தால் அமித் ஷாவை பிரதமராக்குவார்கள் என்று பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார். அதற்கான காரணமாக, `75 வயதாகிவிட்டால் பா.ஜ.க தலைவர்கள் ஓய்வு பெறவேண்டும் என்ற விதியை மோடிதான் கொண்டுவந்தார் என்றும், `அடுத்தாண்டு செப்டம்பரில் மோடிக்கு 75 வயதாவதால் அமித் ஷாவை பிரதமராக்கத் திட்டமிடுகிறார்கள்’ என்றும் கூறினார்.

மோடி - அமித் ஷா

பின்னர், இதற்கு எதிர்வினையாற்றிய அமித் ஷா, `பா.ஜ.க-வில் அப்படியொரு விதியே இல்லை’ என்றும் `எதிர்காலத்திலும் மோடியே பிரதமராகத் தொடர்வார்’ என்றும் தெரிவித்தார். இத்தகைய சூழலில், ஒடிசாவில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா, `77 வயதாகும் முதல்வர் நவீன் பட்நாயக் தனது வயது மற்றும் உடல்நலம் காரணமாக ஒய்வு பெறவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி ஒய்வு பெறுமாறு அமித் ஷா மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறாரா என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ப.சிதம்பரம்

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``நவீன் பட்நாயக் (77) தனது வயது காரணமாக ஒய்வு பெறவேண்டும் என அமித் ஷா கூறியதன் மூலம் மோடியின் (73 ஆண்டுகள், 7 மாதங்கள்) வயது குறித்த குறிப்பையும் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார். இதுகூட பா.ஜ.க ஆட்சியமைக்கும் பட்சத்தில்தான். பா.ஜ.க ஆட்சியமைக்காவிட்டால் அமித் ஷா தான் மிகவும் மகிழ்ச்சியானவராக இருப்பார். எதிர்க்கட்சித் தலைவராக மோடி அல்ல, அமித் ஷாவே அமருவார் என்று தெரிகிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.