5 டிரில்லியன் டாலரை எட்டி இந்திய பங்குச் சந்தை சாதனை

மும்பை: மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளதை தொடர்ந்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, அந்நிய நிதி நிறுவனங்கள் (எப்ஐஐ) பல்வேறு முதலீட்டு தொகுப்புகளிலிருந்து தங்களது முதலீட்டை விலக்கிக் கொண்டன.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திய பங்குச் சந்தையின் செயல்திறன் ஏற்றம் கண்டுவருகிறது. இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு 6 மாத காலத்துக்குள் 1 டிரில்லியன் டாலர் உயர்ந்துள்ளதே இதற்கு சான்றாக கூறப்படுகிறது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு கணிசமாக அதிகரித்ததையடுத்து, 5 டிரில்லியன் டாலர் மதிப்பை கொண்ட பட்டியலில் இந்திய பங்குச் சந்தையும் இணைந்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் ரூ.414.75 லட்சம் கோடியாக அதிகரித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.