“நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி” - செல்லூர் ராஜு புகழாரம்

சென்னை: "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தேமுதிக உள்ளிட்ட ஒருசில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. எனினும், கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தங்கள் பக்கம் வருவதற்கு அதிமுக முயன்றது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அது தொடர்பாக மறைமுகமாக பேசியது குறிப்பிடத்தக்கது. எனினும், அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. மாறாக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற ஒருசில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.