சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை

சென்னை: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.