தூத்துக்குடி | மீன்பிடி விசைப்படகுகள் ஆய்வு தொடக்கம்: 18 குழுக்கள் பணியில் ஈடுபாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 36 அலுவலர்கள் 18 குழுக்களாக பிரிந்து விசைப்படகுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆண்டுதோறும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின் போது, படகுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ReALCraft என்ற வலைதளத்தில் புதுப்பிக்கவும், இயக்கத்தில் இல்லா மீன்பிடி படகுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.