உக்ரைனில் கடும் பனிப்புயல்: 5 பேர் பலி, 19 பேர் காயம்!

 

உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடசாவில் வீசிய கடும் பனிப்புயலால் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். 

சுமார் 21 மாதங்களுக்கும் மேலாக ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. 

இதனிடையே, திங்கள்கிழமை இரவு உக்ரைனில் கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 19-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

படிக்க:  ஓடிடியில் சித்தா!

பனிப்புயலால் 17 மண்டலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் பல ஊர்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

கிரிமியாவில் உள்ள பல நகராட்சிகளில் அவசரநிலை அமலில் உள்ளது. உக்ரைன் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.