``உலக முதலீட்டாளர்கள் பதற்றமடைய வேண்டாம்... மீண்டும் பிரதமர் மோடியே வருவார்! - நிர்மலா சீதாராமன்

`பிரதமர் நரேந்திர மோடி 2024-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவார்; உலக முதலீட்டாளர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் இந்தியா குளோபல் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்துவதற்கான சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது.

பிரதமர் மோடி

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களின் முடிவைப் பற்றி முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்களின் பதற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நானும், என்னைப் போலவே பலரும் இந்தியப் பொருளாதாரத்தையும், அரசியல் சூழலையும், அடிமட்ட உண்மைகளையும், சூழ்நிலையையும் கவனித்துக் கொண்டு இருக்கிறோம். அதன் அடிப்படையில் சொல்கிறேன். பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார். பதற்றமடைய வேண்டாம்.

ஏனென்றால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. வணிகச் சூழலை மேம்படுத்தியிருக்கிறது. இவருக்கு, அவருக்கென்று இல்லாமல் இந்த அரசு அனைவருக்காகவும் வேலை செய்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ரோஜ்கர் மேளா மூலம் நாட்டில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வழங்குவதற்கு அரசு உறுதியேற்றிருக்கிறது. அதன் அடிப்படையில், இதுவரை சுமார் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

நிர்மலா சீதாராமன்

நாங்கள் வழங்கிய பாரிஸ் உறுதிமொழி எங்களால் நிதியளிக்கப்பட்டது. இந்தியா தனது சொந்த நிதியில் முன்னேறி வருகிறது. 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்காக நாங்கள் எப்போதும் காத்திருக்கவில்லை. செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18-வது ஜி-20 உச்சி மாநாட்டில் IMEC கையெழுத்தானது. இது கப்பல் போக்குவரத்து, இரயில்வே மற்றும் சாலைகளின் பல நெட்வொர்க்குகளை உள்ளடக்கிய பலதரப்பட்ட பொருளாதார வழித்தடம். அதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்" எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.