நீண்ட நாட்களாக பிரிந்து இருக்கும் கணவனும் மனைவியும் ஒன்று சேர பரிகாரம்

கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்வதுதான் குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில்தான் நிம்மதி நிலைத்திருக்கும். எவ்வளவுதான் சண்டை சச்சரிவுகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பிரிந்து செல்லாமல் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையை இழந்து பல பேர் கஷ்டப்படுகிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பல வருடங்களாக பிரிந்து இருக்கும் தம்பதிகளும் ஒன்று சேர செய்யக்கூடிய எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கணவனும் மனைவியும் பிரிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மன கஷ்டங்கள் இருக்கலாம். சண்டைகள் இருக்கலாம். சச்சரவுகள் இருக்கலாம். இதோடு சேர்த்து ஜோதிட ரீதியாக சில கிரகங்களும் அதன் காரணமாக இருக்கலாம். இந்த காரணங்களால் பிரிந்த தம்பதிகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறுபடியும் திரும்ப ஒன்று சேர வேண்டும் என்று யாராவது ஒருவர் நினைத்தால் கூட இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஜோதிட ரீதியாக கருவேப்பிலை மரம் என்பது ஆண்களையும், பப்பாளி மரம் என்பது பெண்களையும் குறிக்கக் கூடியது. ஒரு குடும்பத்தில் அடிக்கடி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது என்றாலோ அல்லது பிரிந்து வாழும் தம்பதிகளாக இருந்தாலும் அவர்களின் வீட்டில் கருவேப்பிலை மரத்தையும், பப்பாளி மரத்தையும் வைத்து பாதுகாத்து வளர்க்க வேண்டும். தினமும் தங்கள் கைகளால் அந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த மரம் எந்த அளவிற்கு செழிப்புடன் வளர்கிறதோ, அந்த அளவில் விரைவிலேயே கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

செடிகளோ மரங்களோ வளர்க்க இடவசதி இல்லாதவர்களும், வாடகை வீட்டில் இருக்கும் நபர்களும் அல்லது அப்பார்ட்மெண்ட் போன்ற இடங்களில் இருக்கும் நபர்களும் இந்த பரிகாரத்தை செய்ய முடியாது அல்லவா. அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய மற்றுமொரு பரிகாரத்தை பார்ப்போம். சனிக்கிழமை அன்று அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போக வேண்டும்.

அங்கு போகும்பொழுது தங்கள் வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது ஒரு முறையில் கருவேப்பிலை சாதத்தை செய்து எடுத்துக் கொண்டு போக வேண்டும். அங்கு இருக்கும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி தாமரை பூவை கொடுத்து தங்கள் பெயரிலும் தங்கள் துணையின் பெயரிலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு எடுத்துச் சென்ற கருவேப்பிலை சாதத்தை நெய்வேத்தியமாக பெருமாளுக்கு படைத்துவிட்டு தீபமேற்றி வழிபட வேண்டும்.

பிறகு அந்த நெய்வேத்தியத்தை கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தங்கள் கைகளால் பிரசாதமாக வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவதன் மூலம் பெருமாளின் அருளால் பெருமாள் எப்படி தன் மார்பில் மகாலட்சுமியை வைத்திருக்கிறார்களோ அதே போல் கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை பௌர்ணமி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

இந்த எளிமையான பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடனும் சந்தோஷமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

The post நீண்ட நாட்களாக பிரிந்து இருக்கும் கணவனும் மனைவியும் ஒன்று சேர பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.