பஞ்சத்தின் விளிம்பில் காசா: ஐ.நா உணவு உறுதி திட்டத் தலைவர் எச்சரிக்கை

காசா நகர்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரம் தற்போது பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், அதனால் அங்கு இன்னும் அதிகப்படியான உணவு, நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. உணவு உறுதித் திட்டத்தின் தலைவர் கிண்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை ஹமாஸ் குழுவினர் நடத்தினர். முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பாரா நேரத்தில் நிகழ்ந்த அந்தப் பெரிய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியது. இதில் குழந்தைகள் உள்பட 14,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச சமூகங்களின் அழுத்தம் காரணமாக பிணைக் கைதிகளாக விடுவிக்க ஏதுவாக 4 நாட்கள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் - ஹமாஸ் கடைபிடித்து வருகிறது. இதுவரை ஹமாஸ் 58 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது. இன்று நான்காவது நாளில் இன்னும் அதிகமான பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.