இளைஞர் கொலை: `தன்பாலின உறவுக்கு மறுத்தார்’ - உடலை வெட்டி வீட்டுக்குள் புதைத்த சித்த வைத்தியர் கைது
கும்பகோணம் அருகே தன்பாலின உறவுக்கு மறுத்த இளைஞரை சித்த வைத்தியர் ஒருவர் கொலைசெய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் பின் பகுதியில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சித்த வைத்தியரை கைதுசெய்த போலீஸார் அவரைச் சிறையில் அடைத்திருக்கின்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (27), இளைஞரான இவருக்குத் திருமணம் ஆகவில்லை. சென்னையில் டிரைவராக வேலை பார்த்துவந்தார். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்தவர், கடந்த 13-ம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாக தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார்.
அதன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. பத்மினி அவருக்கு போன் செய்து பார்க்க, செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதையடுத்து கடந்த 15-ம் தேதி சோழபுரம் காவல் நிலையத்தில் பத்மினி புகார் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சோழபுரம் போலீஸார், சோழபுரம் கடைத்தெருவிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்திருக்கின்றனர். அதில் கீழத்தெரு வழியாகச் சென்ற அசோக்ராஜன் மீண்டும் திரும்பவில்லை.
இந்த நிலையில் சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தியிடம் (47) அகோக்ராஜன் பழகியிருப்பதால், அங்கு வந்தாரா என உறவினர்கள் அவரிடம் கேட்டிருக்கின்றனர். அப்போது அவர், `தனக்கு பாலியல்ரீதியாகக் குறைபாடு இருக்கிறது. அதனால் எனக்கு வாழப் பிடிக்கவில்லை என என்னிடம் அழுதுகொண்டே கூறினான். நான் தஞ்சாவூரிலுள்ள டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை எடுக்க வலியுறுத்தினேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
மறுநாள் அசோக்ராஜன் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், `எனக்குச் சில குறைபாடுகள் இருப்பதால் வாழப் பிடிக்கவில்லை’ என அசோக்ராஜன் எழுதி அனுப்பியதுபோல் அந்தக் கடிதம் இருந்தது. இது அசோக்ராஜனின் கையெழுத்து இல்லை என பத்மினி உள்ளிட்டவர்கள் போலீஸில் தெரிவித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கேசவமூர்த்தி மேல் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட, அவரை அழைத்து விசாரணை செய்திருக்கின்றனர். ஆரம்பத்தில் சொன்னதையே திரும்பச் சொன்ன கேசவமூத்தியிடம் போலீஸ் தங்கள் பாணியில் விசாரிக்க, அசோக்ராஜனைக் கொலைசெய்து வீட்டுக்குள் புதைத்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
``அசோக்ராஜனுடன் நான் தன்பாலின உறவு வைத்துக்கொண்டேன். கடந்த 13-ம் தேதி என் வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்தார். அப்போது தன்பாலின உறவுக்கு அழைத்தேன். ஆனால் அவர் மறுத்தார். அப்போது அவருக்கு நீண்ட நேரப் பாலியல் உறவுகொள்ள வீரியம் மிக்க மருந்து ஒன்றைக் கொடுத்தேன். மது போதையில் இருந்த அவரது உடல் அந்த மருந்தை ஏற்றுக்கொள்ளததால் இறந்துவிட்டார்.
இதையடுத்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி என் வீட்டுக்குப் பின்புறம் உள்ள கழிப்பறைக்குள் குழி தோண்டிப் புதைத்துவிட்டேன்” எனப் பதற்றமே இல்லாமல் சொன்னதைக் கேட்டு போலீஸார் அதிர்ந்துபோனார்கள். இதையடுத்து ஆர்.டி.ஓ பூர்ணிமா, திருவிடைமருதூர் டி.எஸ்.பி ஜாபர்சித்திக் உள்ளிட்டோர் தலைமையில் அசோக்ராஜனின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்துள்ளனர். பின்னர் கேசவமூர்த்தியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேசவமூர்த்திக்கு இரண்டு மனைவிகள். ஆனால், இரண்டு பேருமே அவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. கேசவமூர்த்தி இளைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வது வழக்கம். அப்படித்தான் அசோக்ராஜனிடமும் பழகியிருக்கிறார். இதுபோல் பலரிடம் கேசமூர்த்திக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்திருக்கிறது. கேசவமூத்தியுடன் பழகிவந்த இளைஞர் ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு காணாமல்போனார். அவரது நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. அது குறித்தும் போலீஸார் கேசவமூர்த்தியிடம் விசாரணை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.