``தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் இவர்தான்... நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு விவரங்கள்!

சினிமாக்கள் மீதான ஈர்ப்பு வெகுஜன மக்களிடம் அதிகரித்துள்ளது. மக்களுக்கு பிடிக்கும் வகையில் படமெடுப்பதால் ஒரு படத்தின் சாதனையை அடுத்தடுத்த படங்கள் முறியடித்துக்கொண்டே இருக்கின்றன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த மொழியில் நல்ல படம் வெளிவந்தாலும் அதை அங்கீகரிக்க மக்கள் தொடங்கிவிட்டனர். அதற்கேற்ப நடிகர்களின் சம்பளமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 

நாகார்ஜுனா

தென்னிந்திய திரையுலகில் பணக்கார நடிகர் யார் என்று உங்களால் கணிக்க முடிகிறதா… ஆனால், நீங்கள் கணிக்கும் நடிகராக இருக்க முடியாது. ஏனெனில், அக்கினேனி நாகார்ஜுனாதான் தென்னிந்தியாவின் டாப் பணக்கார நடிகர்.

ANR என்று திரைத்துறையில் பரவலாக அறியப்பட்ட அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகன்தான் நாகார்ஜுனா. நாகார்ஜுனா ஒரு படத்துக்கு 9 முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார்.

நடிகர் என்பதைத் தாண்டி திரைப்படத் தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தொழிலதிபர் எனப் பன்முகம் கொண்டவராக உள்ளார். தன் 30 வருட திரைப்பயணத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவரின் இரண்டாவது மனைவி அமலா ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர். இவரின் வாரிசுகள் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். 

நாகார்ஜுனாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 3,010 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் பேனரில் படங்களைத் தயாரித்து சம்பாதிக்கிறார்.  ரியல் எஸ்டேட் பிசினஸில் இந்தியன் சூப்பர் லீக்கில் முதலீடு செய்திருக்கிறார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி அணியின் இணை உரிமையாளராக உள்ளார். இது தவிர விளம்பரங்களில் நடிப்பதன்  மூலமாகவும் பணம் பெறுகிறார்.

சிரஞ்சீவி

ஹைதராபாத்தில் 45 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரமிக்க வைக்கும் பங்களாவில் நாகார்ஜுனா வசித்து வருகிறார். விலையுயர்ந்த கார்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம் போன்றவற்றை வைத்திருக்கிறார். 

தென்னிந்தியாவில் நாகார்ஜுனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பணக்கார நடிகராக டகுபதி வெங்கடேஷ் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.2,200 கோடி.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ரூ.1,650 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 1,370 கோடி சொத்துகளுடன் ராம் சரண் நான்காவது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.