கூட்டணி போட்ட பாக்கியா – ராதிகா.. என்னங்கடா நடக்குது இங்க? ஷாக்கில் ஈஸ்வரி- கோபி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் படுத்து ஈஸ்வரியும், கோபியும் ராதிகாவை குறை பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ராதிகா, பாக்கியா பிரச்னையை அவங்க பாத்துப்பாங்க. நீங்க தூங்குங்க. உங்க பிசினஸ்லையே ஆயிரம் பிரச்னை இருக்கு எனத் திட்டுகிறார்.

இதையடுத்து இனியாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் பாக்கியா நீ காலேஜ் முடிக்கிறதுக்குள்ள நான் பெரிய தொழிலதிபர் ஆகணும். சொந்தமா கார் வாங்கி அதுல உன்னை கூட்டிட்டு வரணும் என்கிறார். இதெல்லாம் நடக்குமா என பாக்கியா சந்தேகமாக கேட்கிறார். அடுத்து செழியனுக்கு காபி போட்டு அவர் அறைக்கு எடுத்து செல்கிறார் பாக்கியா. செழியன் நான் தப்பு பண்ணது உண்மைதான்.

இதையும் படிங்க:  ஃபன்னி கய்ஸ்!. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உண்மையான வசூல் இதுதான்!.. முகத்திரையை கிழித்த பிரபலம்!..

அதை சரினு சொல்லலை. இப்போ ஜெனியோட அருமையை புரிஞ்சிக்கிட்டேன். அவளும், நீயும் என்கிட்ட பேசவே மாட்டிங்கிறீங்க என்கிறார். நீ பண்ண தப்பை உணர்ந்துட்டல. ஆனா நீ உன் தப்பால ஜெனி மனசு உடைஞ்சி இருக்கா. கொஞ்ச நாள் அவளை தொந்தரவு பண்ணாம இரு. ஒரு நாள் உன்னை புரிஞ்சுகிட்டு வருவா என பாக்யா செழியனுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பாக்கியா எல்லாருக்கும் காபி போட்டு வந்து கொடுக்கிறார். ஈஸ்வரி கோபிக்கும் காபி கொடு எனக் கூற அவரை பார்த்துக்க தான் ராதிகா இருக்காங்க. நான் ஏன் காபி போடணும் என்கிறார். உன்ன மாதிரியே அவளும் கோபியை கவனிக்க மாட்டிங்கிறா என்கிறார். இதனால் கடுப்பான பாக்கியா ஈஸ்வரி, ராமமூர்த்தி, கோபி மூன்று பேருக்கும் காபி கொடுக்கிறார்.

இதையும் படிங்க:  சார் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்க!.. பல வருடங்களாக லோகேஷ் ஃபாலோ பண்ணும் செண்டிமெண்ட்!..

அப்பொழுது ராதிகாவும் உள்ளே வர ஈஸ்வரி என் பையன் காலையில் எழுந்த உடனே காபி குடிப்பான். அதனால தான் நான் பாக்யா கிட்ட சொல்லி போட சொன்னேன் என்கிறார் ஈஸ்வரி. எனக்கும் தான் காலைல எழுந்த உடனே காபி குடிக்கணும்னு தோணும் என ராதிகா சொல்ல தன் கையில் இருந்த எழில் காபியை பாக்கியா கொடுக்க ராதிகா வாங்கி கொள்கிறார்.

இதை பார்த்து ஈஸ்வரிக்கும், கோபிக்கும் ஷாக் ஆகிறது. இதையடுத்து வீட்டுக்கு வரும் பழனிசாமி பாக்கியாவை ஒரு இடத்துக்கு அழைத்து போவதாக கூறி அழைத்து செல்கிறார். ராமமூர்த்தியும் போயிட்டு வாம்மா என்கிறார். ஆனால் இதை பார்த்து கோபி என்ன அவன் கூப்பிடுறதும் இவளும் போரா என முழிப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.