இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்தது பிட்ரான்

 

தனது ஸ்மார்ட் வாட்ச் வரிசையை விரிவுபடுத்தும் நோக்கில் பிட்ரான், ரிஃப்ளெக்ட் மேக்ஸ் ப்ரோ மற்றும் ரிஃப்ளெக்ட் ஃப்ளாஷ் ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த ஸ்மார்ட்வாட்ச்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ரிஃப்ளெக்ட் மேக்ஸ் ப்ரோ 2.05 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பேட்டரி ஆயுள் 15 நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.  இதன் விலையானது ரூ.999-க்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த வாட்ச்சானது நீலம், கருப்பு, தங்கம், சில்வர், பிங்க் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வண்ணங்களுடன்  சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரிஃப்ளெக்ட் மேக்ஸ் ப்ரோ குறித்த குறிப்புகள்:

டிஸ்பிளே - 2.05 இன்ச் வைப்ரண்ட் டிஸ்ப்ளே

திரை வெளிச்சம் - பிரகாசமான சூரிய ஒளியில் கூட உகந்த பார்வைக்கு 600 நிட்டுகள் வழங்கப்பட்டுள்ளது

ரெஃப்ரெஷ் ரேட் - 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது

வாட்ச் கேஸ் - நீடித்த உலோக பிரேம், 2.5 டி வளைந்த டிஸ்ப்ளே கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது

கிரௌன் - மேம்பட்ட பயனர் தொடர்புக்கான செயல்பாட்டு இதில் வழங்கப்பட்டுள்ளது

புளூடூத் அழைப்பு - பயணத்தின் போது தடையற்ற புளூடூத் அழைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது

ஆரோக்கியம் கண்காணிப்பு - 24/7 சுகாதார கண்காணிப்பு திறன் இதில் வழங்கப்பட்டுள்ளது

விளையாட்டு  - உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

பேட்டரி ஆயுள் - ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரை நீடிக்கும் அதே வேளையில் 15 நாட்கள் காத்திருப்பு நேரம் வழங்கப்பட்டுள்ளது

வாட்ச் கேஸ் - 100 க்கும் மேற்பட்ட நிலையான தொழில்நுட்ப முகங்கள் வழங்கப்பட்டுள்ளது

சுகாதார கண்காணிப்பு - 24/7 சுகாதார கண்காணிப்பு திறன்கள் வழங்கப்பட்டுள்ளது

ஸ்போர்ட்ஸ் மோட் - உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

பேட்டரி ஆயுள் - ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரை நீடிக்கும், அதே வேளையில் 15 நாட்கள் காத்திருப்பு நேரம் வடிவமைக்கப்பட்டுள்ளது

வாட்ச் முகங்கள் - 100 க்கும் மேற்பட்ட முகங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது

 

ரிஃப்ளெக்ட் ஃபிளாஷ் குறித்த குறிப்புகள்:

இந்த ஸ்மார்ட் வாட்சானது 1.32 அங்குல முழு தொடு 2.5 டி வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 10 நாட்கள் நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு நேரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கருப்பு, நீலம், தங்கம் மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்களுடன் சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் விலையானது ரூ.1,399 கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ச் அம்சங்கள் அம்சங்கள் குறித்த குறிப்புகள்:


மெட்டல் கேஸ் - மேம்பட்ட ஆயுட்காலத்திற்கான உறுதியான துத்தநாக கலவை கொண்ட கேஸ்

டச் டிஸ்ப்ளே - 1.32 இன்ச் ஃபுல் டச் 2.5 டி வளைந்த டிஸ்ப்ளே

ஸ்ட்ராப் - வசதி மற்றும் ஸ்டைலிஸ் லூக்கில் வழங்கப்பட்டுள்ளது

காத்திருப்பு நேரம் - நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு நேரமாக 10 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது

வண்ணங்கள் - கருப்பு, நீலம், தங்கம் மற்றும் சில்வர் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களில் வருகிறது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.