விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து: 25 விசைப்படகுகள் ஏரிந்து நாசம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையத்துக்கு அடுத்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 விசைப் படகுகள் தீயில் கருகி சேதமடைந்தன.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த படகுகள் ஒவ்வொன்றும் ரூ.40 லட்சம் மதிப்புடையது என்பதால், ரூ.15 கோடி வரை பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. சில படகுகள் பெட்ரோல் டேங்க் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களால் தீ பிடித்து எரிந்தது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 25 விசைப்படகுகள் சேதமடைந்திருக்கின்றன் என்று விசாகப்பட்டினம் டிசிபி ஆனந்த் ரெட்டி தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.