த்ரிஷா குறித்து அவதூறு: மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார். இதையடுத்து நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | செத்தும் கொடுத்த பெண்! அமெரிக்காவில் ஏழைகளின் மருத்துவக் கடன் தீர்க்கத் திரளும் நிதி!

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று வருந்துவதாக சர்சைக் கருத்தை தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.