அமெரிக்கா செல்லும் குழுவில் அண்ணாமலையை பரிந்துரைத்தது பிரதமரா! வெளியான தகவல்!

சமீப நாட்களாக இந்தியாவிற்கு வெளிநாட்டு அரசியல்வாதிகள் குழு வருவதும் இந்திய எம்பிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குழு வெளிநாட்டிற்கு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கு அமெரிக்க குழு ஒன்று வந்து பாஜக தலைமை அலுவலகத்திடம் இந்திய அரசியலின் நிலை குறித்தும், 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் குறித்தும் அலசி ஆராய்ந்து ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் தற்போது பாஜக தரப்பில் இருந்து ஐந்து பேர் கொண்ட குழு அமெரிக்காவிற்கு அனுப்ப பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.�


அதாவது லோக்சபா தேர்தலில் இந்தியாவின் நிலையானது எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து விளக்குவதற்காக இந்த குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா அமெரிக்கா அனுப்ப முடிவு செய்துள்ளார். இந்த ஐந்து பேர் பட்டியலில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தென் மாநிலத்திற்காக� பேசுவதற்காகவும் கர்நாடகாவை சேர்ந்த இளம் எம். பி. தேஜஸ்வி சூர்யாவும் இடம்பெற்றுள்ளனர். அதிலும் இவ்விருவரை அமெரிக்க செல்லும் குழுவில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியே நட்டாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.�

Source : Dinamalar

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.