வீட்டில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட பரிகாரம்.

ஒருவருடைய வாழ்க்கையில் இன்னல்களை சந்திக்க நேரிடும் பொழுது அந்த இன்னல்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இன்னல்கள் ஏற்படுவதற்கு நவகிரகங்கள் காரணமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு கண் திருஷ்டிகள் காரணமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு தாங்கள் செய்த பூர்வ புண்ணிய பலனாலும் இன்னல்கள் ஏற்படலாம். இப்படி ஏற்படக்கூடிய இன்னல்களால் நமக்கு தோஷங்கள் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நமக்கு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி மகாலட்சுமியின் அருளை பெற செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் இவை அனைத்தும் நமக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்களால் நிகழக்கூடியவை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. தோஷம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் அவற்றை சரி செய்யும் நோக்கத்தில் நாம் செயல்பட்டோம் என்றால் விரைவிலேயே அந்த தோஷத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளியில் வர முடியும். மேலும் இந்த பரிகாரத்தை நாம் முறையாக செய்யும்பொழுது மேற்கொண்டு எந்த வித தோஷமும் நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் செய்வது நன்மை தரும். மூங்கிலில் செய்யப்பட்ட கைப்பிடி இருப்பது போல் இருக்கும் ஒரு சிறிய கூடையை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த கூடையில் முழுவதும் வெட்டிவேரை நிரப்ப வேண்டும். பிறகு அதில் பச்சை கற்பூரம் மூன்று துண்டுகளை வைத்து அதற்கு மேல் பன்னீரை நன்றாக தெளிக்க வேண்டும். பிறகு அதில் 5 நாணயங்களை வைக்க வேண்டும். பிறகு முழுமையாக இருக்கக்கூடிய இரண்டு விரலி மஞ்சள் வைக்க வேண்டும்.

இவ்வாறு வைத்துவிட்டு ஒரு மஞ்சள் நிற புது துணியை வைத்து அந்த கூடையின் மேல் புறத்தை நன்றாக கட்டிவிட வேண்டும். இவ்வாறு கட்டிய பிறகு இந்த கூடையை நம் வீட்டு நிலை வாசலில் மாட்டி விட வேண்டும். நிலை வாசலில் மாட்ட விருப்பமில்லாதவர்கள் பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இந்த கூடையில் இருக்கும் அனைத்து பொருட்களும் மகாலட்சுமியின் அம்சம் பெற்றவை என்பதால் தோஷம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளையும் நம்மால் பெற முடியும்.

கூடை கிடைக்காதவர்கள் மஞ்சள் நிற துணியில் இவை அனைத்தையும் செய்து மூட்டையாக கட்டி வைத்து வழிபாடு செய்யலாம். தினமும் வழிபாடு செய்யும் பொழுது இதற்கு சாம்பிராணி ஊதுபத்தி தூபம் காட்டி வழிபட வேண்டும். இதில் இருக்கும் பொருட்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும். பழைய பொருட்களை கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரில் விட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு.

இந்த எளிமையான பரிகாரத்தை நம் வீட்டில் செய்து நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கி மகாலட்சுமியின் அருளோடு அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

The post வீட்டில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட பரிகாரம். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.