ரத்தம் சொட்ட, அரை நிர்வாண நிலையில், வீதியில் உதவிக்கு ஏங்கிய 12 வயது சிறுமி; ம.பி பாலியல் `கொடூரம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பங்கள், பாலியல் கொடுமைகள் வடமாநிலங்களில் அடிக்கடி நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, செங்கல்சூளையில் எரித்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்திலும் அது போன்ற ஒரு கொடுமை நடந்திருக்கிறது. உஜ்ஜயினி மாவட்டத்திலுள்ள மகாகால் என்ற இடத்தில் 12 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்.

சிறுமி

அவர் கடுமையான ரத்தப்போக்குடன் அரை நிர்வாணமாக தெருக்களில் நடந்து சென்று, ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உதவி கேட்பது போன்ற வீடியோ, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டுவருகிறது. அரை நிர்வாணமாக அந்தச் சிறுமி உதவி கேட்டபோது யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அவர் உதவி கேட்டு ஒவ்வொரு வீட்டுக் கதவாகத் தட்டினார். அவர் அப்படியே இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்து சென்றார். கடைசியாக ஆசிரமம் ஒன்றைச் சென்றடைந்தார். அங்கிருந்த மதகுரு ஒருவர், சிறுமிக்குக் கட்டிக்கொள்ள ஒரு துண்டு கொடுத்து, அவரை மாவட்ட மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.

அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் தாமாக முன்வந்து அந்தச் சிறுமிக்கு ரத்தம் கொடுத்தனர். போலீஸார் சிறுமியிடம் விசாரித்தபோது, அவரால் அதிர்ச்சியில் எதையும் சொல்ல முடியவில்லை. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமி உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்திருக்கிறது. சிறுமியின் தாயாருக்கும் ஏதோ நடந்திருக்கிறது.

கமல்நாத்

சிறுமி முழுமையாக எதையும் சொல்ல முடியாமல், அதிர்ச்சியில் இருக்கிறார். போலீஸார் தனிப்படை அமைத்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களைத் தேடிவருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் மத்தியப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் கமல்நாத், ``மத்தியப் பிரதேசம் மகள்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. விளம்பரத்திலும் பேச்சிலும் மட்டுமே பாதுகாப்பு இருக்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.