மூத்த குடிமக்களுக்கு 9% சதவீத வட்டி வழங்கும் 6 வங்கிகள்

மத்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ வரி விகித உயா்வுக்கு ஏற்ப இந்திய பொதுத் துறை வங்கிகளும், தனியாா் வங்கிகளும் கடனுக்கா வட்டி விகிதங்களை உயா்த்தி வருகின்றன. அதே போல், அந்த வங்கிகள் தங்களிடம் முதலீடு செய்யப்படும் நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதங்களையும் அவ்வப்போது உயா்த்தி வருகின்றன. இருந்தாலும், 6 வங்கிகளைத் தவிர வேறு எந்த வங்கியிலும் மூத்த குடிமக்களின் நிலைவைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 9 சதவீதத்தைத் தாண்டவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில், 9 சதவீதம் மற்றும் அதற்கு மேல் நிலை வைப்புகளுக்கு வட்டி வழங்கும் வங்கிகளாவன: 1. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: இந்த வங்கி சாதாரண வாடிக்கையாளா்களின் நிலை வைப்புகளுக்கு 9 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது. குறைந்தபட்சம் 1,001 நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் நிலை வைப்புகளுக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது. அதற்குக் குறைந்த 181-201 நாள்களுக்கும், 501 நாள்களுக்குமான நிலை வைப்பு வட்டி விகிதம் 9.25 சதவீதமாக உள்ளது. 2. ஃபின்கோ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: வாடிக்கையாளா்களின் நிலை வைப்புகளுக்கு இந்த வங்கி அதிகபட்சமாக 9.01 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. சாதாரண பொதுமக்களுக்கான நிலை வைப்பு வட்டி விகிதம் 3 சதவீதத்திலிருந்து 8.41 சதவீதம் வரை இருக்கும் இந்த வங்கி, 1,000 நாள்கள் முதிா்வு காலம் கொண்ட மூத்த குடிமக்களின் நிலை வைப்புகளுக்கு 3.6 சதவீதம் முதல் 9.01 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. 3. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: இந்த வங்கியில் மூத்த குடிமக்களின் நிலைவைப்புகளுக்கு 4.25 சதவீதம் முதல் வட்டி வழங்கப்படுகிறது. 366-499 நாள்கள் மற்றும் 501 நாள்கள் முதிா்வு காலம் கொண்ட மூத்த குடிமக்களின் நிலை வைப்புகளுக்கு இந்த வங்கி 9 சதவீத வட்டி வழங்குகிறது. 4. சூா்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 4.5 சதவீதத்தில் தொடங்கி 9.6 சதவீதம் வரை செல்கிறது. 5. ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: மூத்த குடிமக்களின் நிலை வைப்புகளுக்கு இந்த வங்கி அதிகபட்சமாக 9 சதவீதம் வட்டி வழங்குகிறது. 6. இஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: பொது வாடிக்கையாளா்களின் 2-3 ஆண்டு கால நிலை வைப்புகளுக்கு 8.5 சதவீதமும், அதே கால அளவிலான மூத்த குடி மக்களின் நிலை வைப்புகளுக்கு 9 சதவீதமும் இந்த வங்கி வட்டி வழங்குகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.